
ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடக்கும் போது கள்ள ஓட்டுக்களை தடுக்கும் வகையில், வாக்காளர்கள் யாருக்கு வாக்களித்தார்கள் என்பதை சரிபார்த்துக்கொள்ளும் காகித தணிக்கை முறையை தேர்தல் அணையம் அறிமுகம் செய்கிறது.
முதல்வராக இருந்த ஜெயயலிதா மறைவைத் தொடர்ந்து ஆர்.கே.நகரில் ஏப்ரல் 12-ந்தேதி இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் அறிவித்தது. அந்த தொகுதியில் அதிமுக சார்பில் டி.டி.வி தினகரன், ஓ.பி.எஸ். அணி சார்பில் மதுசூதணன், தி.மு.க.சார்பில் பால கணேஷ், பா.ஜனதா சார்பில் கங்கை அமரன், தீபா பேரவை, என பலமுனைப் போட்டி நிலவி வருகிறது.
இந்நிலையில், ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் வாக்குப்பதிவு குறித்து தேர்தல் நடத்தும் அலுவலர் பிரவீண் நாயர், நேற்று பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறுகையில், “ஆர்.கே.நகரில் மொத்தம் 256 வாக்குச்சாவடிகளும், 59 வாக்குச்சாவடி மையங்களும் உள்ளன.இதில் 15 வாக்குச்சாவடி மையங்களில் உள்ள 29 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளன. இந்த தேர்தலில் மொத்தம் 2 லட்சத்து 62 ஆயிரத்து721 வாக்களர்கள் வாக்களிக்க இருக்கிறார்கள்.
ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் புதுவிதமான வாக்குப்பதிவு முறையை அறிமுகம் செய்ய இருக்கிறோம். வி.வி.பி.ஏ.டி. என்ற வாக்களிப்பு முறைய கடந்த 2014ம் ஆண்டு மத்திய சென்னை தொகுதியில் பயன்படுத்தப்பட்டது. இப்போது மீண்டும் பயன்படுத்த இருக்கிறோம்
அதாவது, “வோட்டர் வெரிபைபபில் பேபர் ஆடிட் டிரையல்”( என்ற வி.வி.பி.ஏ.டி.) முறையில் வாக்காளர்களர்கள் வாக்களித்த பின், இந்த எந்திரத்தில் இருந்த ஒரு சிறிய ரசீது வரும். அந்த ரசீதில் வாக்காளர் பெயர், எண், எந்த வார்டு, யாருக்கு, எந்த சின்னத்தில் வாக்களித்தோம் என்று குறிப்பிடப்பட்டு இருக்கும்.
நாம் வாக்களித்த நபருக்கு சரியாக வாக்கு சென்று சேர்ந்துள்ளதா என்பதை உறுதி செய்தபின், அந்த ரசீதை, அருகில் உள்ள ஒரு பெட்டியில் போட்டுவிட வேண்டும். வாக்கு எண்ணிக்கையின் போது, தேவைப்பாட்டால், தணிக்கை செய்ய இந்த சீட்டுக்கள் பயன்படுத்தப்படும்.
330 கட்டுப்பாட்டு எந்திரங்கள், 1350 வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்த இருக்கிறோம். வாக்கு எண்ணிக்கை ஏப்ரல் 15-ந்தேதி ராணி மேரிகல்லூரியில் காலை 8 மணிக்கு தொடங்கும்.
தேர்தல் நடத்தை விதிகள் மீறும் சம்பவங்கள், வாக்களர்களர்களுக்கு பணம் கட்சியினர் பணம் சப்ளை செய்தால், மக்கள் 8004257012 என்ற கட்டணமில்லா எண்ணில் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம்” என்று தெரிவித்தார்.