
வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. இது வலுப்பெறுமா என போகப்போகத்தான் தெரியும்.
தமிழகத்துக்கு வடகிழக்கு பருவ மழை அக்டோபர் துவங்கி நவம்பர் வரை பெய்யும். ஆனால் கடந்த ஆண்டு டிசம்பரில் 1, 2 தேதிகளில் பெய்த மழை காரணமாக சென்னையில் வரலாறு காணாத மழை வெள்ளம் வந்தது.
சென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்டங்களும் கடலூரும் கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்த ஆண்டு வழக்கமாக பெய்யும் பருவ மழை பொய்த்து போனது. அக்டோபர் மற்றும் நவம்பர் மாதம் மழை பெய்யாமல் டிசம்பரில் பருவ மழை துவங்கியது.
முதலில் நடா புயல் உருவானது. ஆனால் அது எதிர்பார்த்த மழையை தராமல் வலுவிழந்தது. அதனால் மழை பெய்ய வில்லை. அதன் பிறகு வங்கக்கடலில் அந்தமான் அருகே வர்தா அந்தமான் அருகே வங்கக்கடலில் உருவானது.
ஆந்திராவை நோக்கி போகும் என எதிர் பார்க்கப்பட்ட வர்தா புயல் சென்னையை நோக்கி திரும்ப பலத்த சேதத்தை விலைவித்தது. சென்னை ,காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆயிரக்கணக்கில் மரங்கள் வீழ்ந்தன.
ஆனால் குடி நீர் ஏரிகளுக்கு போதிய நீர் வரவில்லை. இந்நிலையில் மீண்டும் வங்கக்கட்டலில் காற்றழுத்த தாழ்வு நிலை ஒன்று உருவாகி உள்ளது. அந்தமான் அருகே உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை வலுப்பெற்றால் தமிழகத்துக்கு மழை கிடைக்க வாய்ப்பு உண்டு.