36 லட்சம் மதிப்புள்ள ரூ.2000 நோட்டுகள் சிக்கியது - ஜவுளிக்கடை அதிபர் உள்பட 5 பேர் கைது

Asianet News Tamil  
Published : Dec 17, 2016, 12:13 PM ISTUpdated : Sep 19, 2018, 02:48 AM IST
36 லட்சம் மதிப்புள்ள ரூ.2000 நோட்டுகள் சிக்கியது - ஜவுளிக்கடை அதிபர் உள்பட 5 பேர் கைது

சுருக்கம்

கோவை அருகே, பழைய ரூபாய் நோட்டுக்கு கமிஷன் அடிப்படையில் புதிய நோட்டுக்களை மாற்றியதாக 5 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

கோபி செட்டிபாளையம் மொடக்குறிச்சி பகுதியில் புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை கொடுத்து கமிஷன் அடிப்படையில் பழைய ரூபாய் நோட்டு பெற சிலர் வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில் போலீசார் மொடக்குறிச்சி அருகே நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக வந்த ஒரு காரை போலீசார் மடக்கி சோதனை செய்தனர். காரில் ரூ.36 லட்சம் மதிப்பிலான புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளும், ரூ.90 ஆயிரத்திற்கு நூறு ரூபாய் நோட்டுகளும் இருந்தன. 

இதுபற்றி விசாரித்தபோது, பொள்ளாச்சியை சேர்ந்த மனோஜ் (36). சிவில் இன்ஜினியர். கோவை ஆலாந்துறையை சேர்ந்த சக்திவேல் (39). கோவை, பொள்ளாச்சியில் ஜவுளிக்கடை வைத்துள்ளார் என தெரியவந்தது. இவர்கள் ரூ.37 லட்சம் புதிய நோட்டுகளை கொடுத்தால் ரூ.50 லட்சம் பழைய ரூபாய் நோட்டுகள் கமிஷனாக கிடைக்கும் என்பதால் மாற்றியதாக தெரிவித்தனர். இதை யடுத்து 37 லட்சம் மற்றும் கூட்டாளிகள் 3 பேர் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

PREV
click me!

Recommended Stories

Ration Card Update: ரேஷன் கார்டுதாரர்களே உஷார்! ஜூலை 5-க்குள் 'இதை' செய்யாட்டி ரேஷன் பொருள் கட்?
எடப்பாடிக்கு அதிர்ச்சி : பதவிகளை துறந்து போர்க்கொடி தூக்கிய எஸ்.பி.வேலுமணி மற்றும் சீனியர்கள் !