கல்யாணமான ஒரே நாளில் புதுப்பெண் தற்கொலை...! வாணியம்பாடியில் சோகம்

 
Published : Apr 27, 2018, 01:04 PM ISTUpdated : Sep 19, 2018, 02:17 AM IST
கல்யாணமான ஒரே நாளில் புதுப்பெண் தற்கொலை...! வாணியம்பாடியில் சோகம்

சுருக்கம்

new couple suicide

திருமணம் ஆன ஒரே நாளில் புதுமணப் பெண், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் வாணியம்பாடியில் நடந்துள்ளது. இந்த தற்கொலை குறித்து
வாணியம்பாடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேலூர் மாவட்டம், வாணியம்பாடி, நேதாஜி நகர் மருத்துவர் காலனியைச் சேர்ந்தவர் விநாயகம். இவரது மகள் மீனா (20). இவருக்கும் குரிசிலாப்பட்டை
பகுதியைச் சேர்ந்த நாதஸ்வர கலைஞர் கோவிந்தராஜ் (25) என்பவருக்கும் நேற்று முன்தினம் திருமணம் நடைபெற்றது.

மணமக்கள் முறைப்படி மணமகள் வீட்டுக்கு அழைத்து வரப்பட்டனர். இந்த நிலையில் மணமகன் கோவிந்தராஜ் நேற்று மாலை வேலை காரணமாக வெளியே
சென்று விட்டார்.

கோவிந்தராஜ், வெளியே சென்றிருந்த நேரத்தில், மணப்பெண் மீனா, அதே பகுதியில் உள்ள உறவினர் யுவராஜ் என்பவரது வீட்டுக்கு சென்றதாக கூறப்படுகிறது.
ஆனால் யுவராஜ் வீட்டில் யாரும் இல்லை தெரிகிறது.

இந்த நிலையில் மணமகள் மீனா, திடீரென யுவராஜ் வீட்டிலேயே தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனிடையே மீனாவை காணாத அவரது
குடும்பத்தினர் தேடி வந்தனர். யுவராஜ் வீட்டுக்கு வந்த அவர்கள், மீனா தூக்கில் தொங்கியதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இது குறித்து, வாணியம்பாடி போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் அங்கு வந்த போலீசார், மீனாவின் உடலை மீட்டு பிரேத
பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மீனா தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணம் ஆன ஒரே நாளில் ஏன் மீனா தற்கொலை செய்து
கொண்டார்? கோவிந்தராஜுடனான திருமணத்தில் அவருக்கு விருப்பம் இல்லையா? அல்லது வேறு யாரையாவது மீனா காதலித்துள்ளாரா? என பல்வேறு
கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.திருமணம் ஆகி ஒரே நாளில் இளம் பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம்அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

PREV
click me!

Recommended Stories

தவெக கூட்டத்தில் உணவு கிடையாது.. தண்ணீர் பாட்டில் மட்டும்தான்.. செங்கோட்டையன் விளக்கம்
தொடர் விடுமுறை.. சொந்த ஊர் போறீங்களா?.. போக்குவரத்துக்கழகம் சொன்ன குட்நியூஸ்..!