
விடுதியில் தங்கியிருக்கும் பெண்களை மறைந்திருந்து வீடியோ எடுத்த துணை நடிகர் ஒருவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவம் சென்னையில் நடந்துள்ளது.
சென்னை, ஈக்காட்டுதாங்கள், பூமகள் நகரில் உள்ள பெண்கள் விடுதியையொட்டி, அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று உள்ளது. இந்த குடியிருப்பில் வைரமூர்த்த என்ற துணை நடிகர் வசித்து வந்துள்ளார்.
விடுதியில் இருந்து பெண்கள் வெளியே வரும்போது அவர்களை வீடியோ எடுப்பதை வைரமூர்த்தி வாடிக்கையாக கொண்டிருந்ததாக தெரிகிறது. வைரமூர்ததி, மாடியில் பெண்கள் நடனமாடினால், அவர்களை வைரமூர்த்தி வீடியோ எடுத்துள்ளார். இது குறித்து விடுதி காப்பாளர், கிண்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்த புகாரின் அடிப்படையில், வைரமூர்த்தியை போலீசார் கண்காணித்தனர். பெண்களை வீடியோ எடுத்த வைரமூர்த்தியை போலீசார் கையும் களவுமாக பிடித்தனர். வைரமூர்த்தி வைத்திருந்த செல்போனையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 3 பிரிவுகளின்கீழ் வைரமூர்த்தி மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர். கைது செய்யப்பட்ட துணை
நடிகர் வைரமூர்த்தி சென்னை 28 திரைப்படம் மற்றும் பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்துள்ளார். துணை நடிகர் வைரமூர்த்தியிடம் போலீசார் விசாரணை நடத்தியபின் அவர் புழல சிறையில் அடைக்கப்பட்டார்.