மிரட்டும் கொரோனா.. சென்னையில் திடீர் அதிகரிப்பு.. மீண்டும் அமலுக்கு வந்த கட்டுப்பாடுகள்..

By Thanalakshmi VFirst Published Jun 16, 2022, 3:27 PM IST
Highlights

தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் சென்னை விமான நிலையத்தில் கொரோனா தடுப்பு விதிமுறைகள் மீண்டும் அமலுக்கு வந்துள்ளன.
 

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது.  தினசரி கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத வகையில் அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 476 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லால் கடந்த மூன்று மாதங்களுக்கு பிறகு தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு பதிவாகியுள்ளது.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் , செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு இரட்டை இலக்கத்தில் பதிவாகி வருகிறது. தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா பரவலை கருத்தில் கொண்டு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. மேலும் சென்னையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தினால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்துவிடும் என்றும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

மேலும் படிக்க:தமிழகத்தில் 3 நாட்களுக்கு கனமழை.. எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை அப்டேட்..

எனவே கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். இந்நிலையில் கொரோனா பாதிப்பு தீவரமடைந்து வருவதால் பரிசோதனைகளை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் சென்னை விமான நிலையத்தில் கொரோன தடுப்பு விதிமுறைகள் மீண்டும் அமலுக்கு வந்துள்ளன. அதன்படி, பயணிகள் முக கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைப்பித்து உள்ளிட்டவற்றை பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

பயணிகள் முக கவசம் அணியாமல் விமானத்தில் ஏற தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பயணிகள் அனைவரும் 2 தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்ட சான்றுடன் விமானத்தில் பயணிக்க வேண்டும் என்றும் முக கவசம் அணியாதவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கபடும் என்றும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க:நபிகள் நாயகத்தை விமர்சித்த பாஜக செய்தி தொடர்பாளர் நூபுர் ஷர்மா பெண் அல்ல பேய்..! ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்

click me!