நபிகள் நாயகத்தை விமர்சித்த பாஜக செய்தி தொடர்பாளர் நூபுர் ஷர்மா பெண் அல்ல பேய்..! ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்

Published : Jun 16, 2022, 03:10 PM ISTUpdated : Jun 16, 2022, 04:18 PM IST
நபிகள் நாயகத்தை விமர்சித்த பாஜக செய்தி தொடர்பாளர் நூபுர் ஷர்மா பெண் அல்ல பேய்..! ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்

சுருக்கம்

பாஜக செய்தி தொடர்பாளர் நபிகள் நாயகத்தை விமர்சித்ததால் உலகில் உள்ள அனைத்து இஸ்லாமிய நாடுகளும் இந்தியாவிற்கு எதிராக திரும்பியுள்ளதாக காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார்  

ஆளுநர் மாளிகை முற்றுகை

நேஷனல் ஹெரால்டு வழக்கில், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் ராகுல்காந்தியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்துவதற்க்கு கண்டனம் தெரிவித்தும் டில்லியில் உள்ள  அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்திய காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் மீதும் காவல்துறையினர் தாக்குதல் நடத்தியதை கண்டித்தும், சென்னையில் ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் தமிழ்நாடு காங்கிரா் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, முன்னாள் தலைவர் இ.வி.கே.எஸ் இளங்கோவன் கலந்து கொண்டனர். இதனையடுத்து சைதாப்பேட்டையில் இருந்து ஆளுநர் மாளிகையை முற்றுகையிட சென்ற காங்கிரஸ் கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.

ஆயுதம் ஏந்தவும் தெரியும்

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய .ஈ.வி.கே எஸ் இளங்கோவன், நேஷனல் ஹெரால்டு வழக்கில் ராகுல் காந்தி குற்றம் செய்யாதவர்.அவரை அவமானப் படுத்தவேண்டும், பயமுறுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் அமலாக்கத்துறை 10 மணி நேரத்திற்கு மேல் விசாரணை நடத்துவதாக தெரிவித்தார். டெல்லியில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்திற்கு போலீசார் செல்வதற்கு யார் அனுமதி கொடுத்தது. தலைவர்கள் மீது காவல்துறை தாக்குதல் நடத்தியுள்ளது. தொடர்ந்து இதுபோன்ற அடக்குமுறையில் மத்திய பாஜக அரசு ஈடுபட்டால், கொடி பிடிக்கும் காங்கிரஸ்காரர்களுக்கு ஆயுதம் ஏந்தவும் தெரியும் என எச்சரிக்கை விடுத்தார்.மகாத்மா காந்தி வழியில் காங்கிரஸ் கட்சி அகிம்சை கட்சிதான். ஆனால், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் கூட எங்கள் தலைவர் தான் எனவே எங்களிடம் விளையாடதீர்கள். வருகிற தேர்தலில் மோடிக்கு டெபாசிட் கூட கிடைக்காது என தெரிவித்தார்.நபிகள் நாயகம் பற்றி அவதூறாக பேசிய நூபுர் ஷர்மாவை பெண் என்று சொல்லக்கூடாது, பேய் என்று சொல்லலாம். உலகில் அனைத்து இஸ்லாமிய நாடுகளும் இந்தியாவிற்கு எதிராக திரும்பி உள்ளதாகவும் கூறினார்.

PREV
click me!

Recommended Stories

ஜெயலலிதாவின் வலது கரம் டிடிவி.. தினகரனை வானளாவப் புகழ்ந்த அண்ணாமலை
கொஞ்சம் கூட நன்றி இல்லையா ஸ்டாலின்! அரசு ஊழியர்களுக்கு இப்படி செய்யலாமா? சொல்வது யார் தெரியுமா?