"தாமரையைப் போல... நோட்டாவை விட குறைவு"... பாஜகவை வெச்சு செஞ்ச விளம்பரம்'- கால் டாக்சி ஆபீசுக்கு மிரட்டல் கால்!

First Published Jan 9, 2018, 6:44 PM IST
Highlights
new call taxi ads regards BJP fighting with NOTA in RK Nagar by poll


தாமரையைப் போல... நோட்டாவை விட குறைவு என்ற விளம்பரப்படுத்திய சென்னை கால்டாக்சி நிறுவனத்துக்கு பாஜகவினர் பெயரால் மிரட்டல் விடப்பட்டது குறித்து போலீசிலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

நடந்து முடிந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேச்சை வேட்பாளர் தினகரன் ஆளும்கட்சி, எதிர்கட்சி தேசியகட்சி என ஒட்டு மொத்தமாக தூக்கி அடித்து விட்டு ஓட்டை அள்ளினார்.

வாக்குகள் என்னும் நேரத்தில் ஒவ்வொரு சுற்றிலும்  பாஜகவுக்கும் நோட்டாவுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. ஆனாலும் பாஜகவை ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று நோட்டா 5வது இடத்தை பிடித்தது. சூறாவளி பிரச்சாரம், தேசிய ஆளும் கட்சியாக இருக்கும் பாஜக 1368 வாக்குகளுடன்  நோட்டவிடம் தோற்றுப்போனது.

இந்நிலையில், ஆர்.கே நகரில் நோட்டாவிடம் தோற்றுப்போனதால் சமூவலைதளங்களில் பாஜகவை வெச்சு செய்துவருகின்றனர். சமூக வலைதளங்களில் உலாவுவதைப்போல சென்னையில் இயங்கும் முன்னணி கால் டாக்சி நிறுவனம் ஒன்று தனது நிறுவனத்தை விளம்பரப்படுத்தும் நோக்கமாக ஒரு புதிய வசனத்தை மக்களிடம் எளிதில் சென்றடைய கூடிய வாக்கில் விளம்பரம் செய்ய நினைத்தது.

அது என்னன்னா “தாமரையைப் போல... நோட்டாவை விட குறைவாக வெளியூர் கட்டணங்கள்” என்ற வாசகம் இடம்பெற்றிருந்தது. ஆர்,கே. நகர் இடைத் தேர்தலில் நோட்டாவிடம் பாஜக தோற்றதைக் குறிப்பிடும் விளம்பரம் செய்ததால் இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இந்நிலையில் கால்டாக்சி நிறுவனத்தினர் போலீசில் ஒரு புகார் கொடுத்துள்ளனர். அதில் பாஜகவின் பெயரால் தங்களுக்கு மிரட்டல் வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மிரட்டல் ஆடியோவும் தற்போது சமூக வாட்ஸ் ஆப், ட்விட்டர் மற்றும் முகநூலில்  வைரலாகிறது.  மேலும் இந்த விளம்பரத்தை நீக்க வேண்டும் என பாஜக நிர்வாகிகள் சிலரும் அந்த நிறுவனத்துக்கு எச்சரிக்கை விடுத்திருக்கின்றனர். ஆனால் இந்த நிருவனாமோ 2ஜி, ரஜினிகாந்த், ஆர்கே நகரில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தது என அனைத்தையும்  முன்வைத்தும் விளம்பரங்களை போட்டோம் என விளக்கம் அளித்தது.

click me!