
குக்கரால் வந்த புது பிரஷர்...! நேரம் காலம் தெரியாம கடைய இங்கேயா திறப்பது..?
சென்னை ஆர்கே நகர் இடைதேர்தல் வரும் 21 ஆம் தேதி நடைபெற உள்ளதை தொடந்து வேட்பாளர்கள் தற்போது தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு உள்ளனர்
இதற்கு முன்னதாக பணபட்டுவாடா நடந்துள்ளதாக கூறி, நடைபெற விருந்த தேர்தலை தள்ளி வைக்கப்பட்டது இந்நிலையில் மீண்டும் ஆர்.கே நகரில் தேர்தல் நடைபெற உள்ளதால் தேர்தல் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளனர்
பண பட்டுவாடா நடக்கூடாது என்பதற்காக தீவிர பரிசோதனையில் ஈடுபட்டு உள்ளனர்
குஷியில் ஆர்.கே நகர் மக்கள்
திமுக ஒரு பக்கம் அதிமுக ஒருபக்கம், தினகரன் ஒரு பக்கம் என பலமுனை போட்டி நிலவி வருகிறது.
இதில் தினகரனுக்கு ஒதுக்கப்பட்ட குக்கர் சின்னத்திற்கு வாக்கு அளிக்க வேண்டும் என தினகரன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மும்முரமாக பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.
சோதனை
பணபட்டுவாடாவோ அல்லது இலவசங்களையோ வழங்கக்கூடாது என தேர்தல் ஆணையம் கட்டுப்பாடுகள் விதித்துள்ளது.
இருந்தபோதிலும் இலவச குக்கர் மற்றும் வேறு சில வழிகளில் பணபட்டுவாடா நடைபெறுவதாக தொடந்து குற்றசாட்டுகள் எழுகின்றன. இந்நிலையில் பொதுமக்கள் ஒரு புதிய குக்கரை வாங்கினால் கூட,அதற்கான ரசிது உள்ளதா என அதிகாரிகள் சோதனையிட்டு வருகின்றனர்
இந்நிலையில்,பெரும் பரபரப்பில் உள்ள அதே ஆர் கே நகரில்,பிரபல தனியார் நிறுவனமான பட்டர்பிளை புதிய குக்கர் கடையை திறந்துள்ளது.
இது மற்றவர்களை வெறுப்பேற்றவா அல்லது நேரம் காலம் தெரியாமல் திறக்கப்பட்டதா..?அதுவும் பெட்டெர்மாஸ் லைட்டே தான் வேணுமா என்பதற்கு ஏற்ப, ஆர் கே நகருக்கு அடுத்த ராயபுரத்தில் தான் கடையை திறக்க வேண்டுமா என்ற கேள்வியை அனைவரும் முன் வைக்கின்றனர்.
அதாவது தொப்பி சின்னம் தான் வேண்டும் என போட்டி போட்டு வந்த தினகரனுக்கு,குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்டதால் பிரஷர் அதிகமாகும் என நினைத்தவர்களுக்கு எல்லாம், அதே குக்கரால் தற்போது பிரஷர் அதிகமாகி உள்ளது என்றே கூறலாம்....
அதன் பிரதிபலிப்பு தான்...டோக்கன் வழங்குவதாக வந்த புகாரை அடுத்து ,வருமான வரித்துறையினர் குக்கர் கடையில் அதிரடி சோதனை செய்து வருகின்றனர்