Nepal Flood: நேபாளத்தில் சிக்கிய தமிழர்கள்.. எத்தனை பேர் மீட்பு? எத்தனை பேர் மாயம்? தமிழக அரசு ரிப்போர்ட்!

Published : Aug 30, 2026, 11:38 AM IST
Nepal Flood

சுருக்கம்

Nepal Flood: நேபாள பெரு வெள்ளத்தில் சிக்கிய தமிழர்கள் 219 பேர் மீட்கப்பட்டுள்ளதாக தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார். இது தொடர்பான முழு விவரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் சிக்கிய தமிழ்நாட்டு மக்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. இந்த நிலையில், நேபாளம் சென்ற 319 பேரில் 219 பேர் மீட்கப்பட்டுவிட்டதாகவும், அவர்கள் ஆகஸ்ட் 31 அதாவது நாளை இரவுக்குள் தமிழகம் வந்து சேர்வார்கள் என்றும் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.

நேபாளத்தில் சிக்கிய தமிழர்கள்

முதல்வர் ஜோசப் விஜய் உத்தரவின் பேரில், மீட்புப் பணிகளை ஒருங்கிணைப்பதற்காக அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, ராஜமோகன், தென்னரசு மற்றும் வினோத் ஆகியோர் டெல்லிக்குச் சென்றிருந்தனர்.

இந்தக் குழு நேற்றூ இரவு சென்னை திரும்பிய நிலையில், வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் தென்னரசு மட்டும் மீட்புப் பணிகளைக் கண்காணிக்க டெல்லியிலேயே தங்கியுள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜமோகன், டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் போர்க்கால கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், இந்திய அரசு மற்றும் நேபாள அதிகாரிகளுடன் இணைந்து மீட்புப் பணிகள் ஒருங்கிணைக்கப்படுவதாகக் கூறினார்.

Nepal Flood: பனிமலை சரிந்து ஏரி உடைந்ததா? நேபாள பெரு வெள்ளத்துக்கு காரணம் என்ன? அதிர்ச்சி தகவல்!

டெல்லியில் வார் ரூம் அமைப்பு

பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவ ஏற்பாடுகள் செய்யப்பட்டதாகவும், தங்களுக்கு ஆயிரக்கணக்கான தொலைபேசி அழைப்புகள் வந்ததாகவும் அவர் தெரிவித்தார். "டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் ஒரு வார் ரூம் அமைக்கப்பட்டது. சிக்கியவர்களின் குடும்பத்தினருக்காக நான்கு வகையான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. எங்களுக்கு ஆயிரக்கணக்கான போன் கால்கள் வந்தன. நாங்கள் மத்திய வெளியுறவுத்துறை செயலாளரை நேரில் சந்தித்துப் பேசினோம். இந்தியாவும் நேபாளமும் இணைந்து மேற்கொள்ளும் நடவடிக்கைகள், இந்திய அரசுடன் இணைந்து தமிழ்நாடு அரசு எடுக்கும் நடவடிக்கைகள் ஆகியவற்றை ஒருங்கிணைத்துள்ளோம்," என்றார்.

219 பேர் மீட்பு; 100 பேர் மாயம்

மொத்தமாக தமிழ்நாட்டிலிருந்து 319 பேர் நேபாளம் சென்றதாகவும், அவர்களில் 219 பேர் மீட்கப்பட்டுவிட்டதாகவும், மீதமுள்ள 100 பேரைக் காணவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். ராஜமோகன் மேலும் கூறுகையில், "மொத்தமாக தமிழ்நாட்டிலிருந்து 319 பேர் வெவ்வேறு குழுக்களாக நேபாளம் சென்றிருந்தனர். அவர்களில் 219 பேர் பாதுகாப்பாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் ஆகஸ்ட் 31-ம் தேதி இரவுக்குள் சென்னை வந்துவிடுவார்கள்.

மீதமுள்ள 100 பேரைக் கண்டுபிடிக்க முடியவில்லை, அவர்கள் தற்போது காணாமல் போனவர்களாகக் கருதப்படுகிறார்கள். இது ஒரு சர்வதேச அளவிலான பேரிடர். உடமைகள் கூட நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் தொலைவில் கண்டெடுக்கப்பட வாய்ப்புள்ளது. இரு நாட்டு ராணுவமும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளது.

Nepal Flood: கைலாஷ் பாதை துண்டிப்பு, 105 இந்தியர்கள் மாயம்! ரசுவா துயரம் பற்றி முழு விவரம்

மகாதேவி யாத்திரை சென்ற 49 பேர் எங்கே?

முதல் கட்டமாக, மீட்கப்பட்ட 21 பேர் டெல்லிக்கு அழைத்து வரப்பட்டனர். பின்னர், கும்பகோணத்தைச் சேர்ந்த ஒரு ஏஜென்சி மூலம் சென்ற 57 பேரில், 21 பேர் பாதுகாப்பாக சென்னைக்கு அழைத்து வரப்பட்டனர். அந்தக் குழுவில் உள்ள மீதமுள்ள 36 பேரைக் கண்டுபிடிக்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன" என்றார். மேலும், சீன எல்லை வழியாகச் சென்ற 150 பேர் கொண்ட குழு காத்மாண்டுவை அடைந்துள்ளதாகவும், 39 பேர் கொண்ட மற்றொரு குழுவும் பாதுகாப்பாக இருப்பதாகவும் அவர் கூறினார். ஆனால், மகாதேவி யாத்திரை சென்ற 49 பேர் குறித்த தகவல் இன்னும் கிடைக்கவில்லை என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Vegetable Price Today: கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி விலை உயர்வு.. இன்று எந்த காய்கறி எவ்வளவு தெரியுமா?
Sugar Price Shock: சர்க்கரை வாங்குவதிலும் கட்டுப்பாடா? Zepto, Instamart-ல் ஆர்டர் லிமிட்.. கடைகளிலும் புதிய விதிமுறை!