யாருக்கும் பாதிப்பு இல்லை - நெல்லை மாவட்ட ஆட்சியர் தகவல்..!

 
Published : Mar 17, 2018, 04:14 PM ISTUpdated : Sep 19, 2018, 02:05 AM IST
யாருக்கும் பாதிப்பு இல்லை - நெல்லை மாவட்ட ஆட்சியர் தகவல்..!

சுருக்கம்

Nellai district collector information

அதிக திறன் கொண்ட ஹாலஜன் விளக்கின் கேஸ் கசிவு காரணமாகவே கண்களில் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்றும்  பள்ளி மாணவர்கள் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார். 

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் அருகே இந்து தொடக்கப்பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது. இதில் அதிக திறன் கொண்ட மின்விளக்குகள் பயன்படுத்தியுள்ளனர். 

மின்விளக்குகளிலிருந்து வெளிவந்த கதிர்வீச்சுகள் காரணமாக மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் உட்பட அனைவருக்கும் கண்ணில் எரிச்சல் ஏற்பட்டுள்ளது. 

இதையடுத்து விழா முடிந்து வீட்டிற்கு சென்றதும் அனைவருக்கும் கண் எரிச்சல் அதிகமாகியுள்ளது. 

இதைதொடர்ந்து இன்று காலை அனைவரும் பள்ளியை முற்றுகையிட்டுள்ளனர்.  இதனை தொடர்ந்து மாணவர்கள், பெற்றோர்களை பள்ளி நிர்வாகம் சார்பில் திருநெல்வேலி தனியார் கண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 

அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து பேசிய கண் மருத்துவர், மாணவர்களுக்கு பயப்படும் வகையில் எவ்வித பாதிப்பும் இல்லை என்றும் அதிக திறன் கொண்ட ஹாலஜன் விளக்கின் கேஸ் கசிவு காரணமாகவே கண்களில் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்றும் தெரிவித்தார். 

உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், ஓரிரு நாட்களில் சரியாகிவிடும் என்றும் குறிப்பிட்டார். 

இந்நிலையில், இதுகுறித்து தகவல் அறிந்து வந்த மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி மருத்துவமனையில் குழந்தைகளை சந்தித்து நலம் விசாரித்தார். 

பின்னர், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், அதிகத் திறனுள்ள மின்விளக்கொளி பட்டதால் மாணவர்களின் கண்களில் நீர் வடிதல், கண் சிவந்திருத்தல் ஆகிய அறிகுறிகள் மட்டுமே இருப்பதாகத் தெரிவித்தார்.

எவருக்கும் பார்வை பாதிக்கப்படவில்லை என்றும் அனைவரும் வெளிநோயாளிகளாகச் சிகிச்சை பெற்றபின் வீடு திரும்பி வருவதாகவும் அவர் தெரிவித்தார். 

PREV
click me!

Recommended Stories

11 படுதோல்வி.. பழனிசாமி பெயரைச் சொல்லவே வெட்கமா இருக்கு! கோபத்தில் கொப்பளித்த ஓபிஎஸ்!
இபிஎஸ்.. ஸ்டாலின்.. விஜய்... யார் முதல்வரானாலும் மக்கள் அந்த கொடூரத்தை அனுபவிப்பார்கள்..! பீதி கிளப்பும் உண்மை..!