
நீட் தேர்வு விவகாரம்…. மத்திய அமைச்சரை சந்திக்க டெல்லி சென்றனர் தமிழக அமைச்சர்கள்….
தமிழகத்தில் நீட் தேர்வு பிரச்சனை குறித்து இறுதி முடிவு எடுப்பதற்கும், நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்களிக்க வேண்டும் என வலியுறுத்தியும் மத்திய அமைச்சர்களை சந்திப்பதற்காக தமிழக அமைச்சர்கள் டெல்லி சென்றுள்ளனர்
தமிழகத்தில் நீட் தேர்வு விவகாரம் பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்தநிலையில், நீட் தேர்வு குறித்து தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றிய தீர்மானம், மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
ஆனால் இந்த தீர்மானம் குறித்து மத்திய அரசு எந்தவித நடிவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் மருத்துப் படிப்பிற்கான அட்மிஷன் இன்னும் நடைபெறாமல் உள்ளது.
இந்த நிலையில், தமிழக அமைச்சர்கள் தங்கமணி, சி.வி.சண்முகம், கே.பி.அன்பழகன், விஜயபாஸ்கர் ஆகியோர் நேற்று இரவு டெல்லி புறப்பட்டுச் சென்றனர்.
இன்று காலை ஜெயக்குமார் புறப்பட்டு செல்கிறார். அதன்பின் இன்று காலை 10.30 மணிக்கு, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டாவை, சந்தித்து நீட் விவகாரம் குறித்து பேசுகின்றனர்.