அவ தோழி ஒருத்தி இருக்கிறா அவதான் சூனியக்காரி... எங்களைப் பிரிக்க சூழ்ச்சி செஞ்சிட்டா... கழுத்தை அழுத்த காதலன் பகீர் தகவல்கள்...

 
Published : May 04, 2018, 03:21 PM ISTUpdated : Sep 19, 2018, 02:19 AM IST
அவ தோழி ஒருத்தி இருக்கிறா அவதான் சூனியக்காரி... எங்களைப் பிரிக்க சூழ்ச்சி செஞ்சிட்டா... கழுத்தை அழுத்த காதலன் பகீர் தகவல்கள்...

சுருக்கம்

Naveen Kumars confession

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தோட்டக் கலை படித்துவரும் மாணவி லாவண்யாவைக் கடந்த ஏப்ரல் 30ஆம் தேதி பல்கலைக்கழக விடுதி அருகே அவரது காதலன் நவீன் தாறுமாறாக கொலை வெறியோடு கழுத்தை அறுத்தார். இதில் படுகாயம் அடைந்த மாணவி பல்கலைக் கழக மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். விஷமருந்தித் தற்கொலைக்கு முயன்ற நிலையில் நவீன் கடலூர் அரசுத் தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் குறித்த மாணவியின் கழுத்தை அறுத்த நவீனிடம் ஏன் தம்பி இப்படி பண்ணீங்க? அவள் கழுத்தை அறுக்கும் அளவுக்கு உங்களுக்குள் என்ன பிரச்சனை? இதுக்கப்புறமும் லாவண்யாவை கல்யாணம் பண்ணிப்பியா? என கேட்டதற்கு  எப்படி கூலாக பதில் அளித்துள்ளார்.

லாவண்யா செல்போனில் மெசேஜ் அனுப்புவாளா? கால் செய்வாளா என  செல்போனை பார்த்தபடி இருந்த காதலன் நவீனிடம் கேள்விகளை கேட்டாராம் ஒரு போலிஸ், தம்பி நவீன் நல்லாருக்கிங்களா? வலி இப்போ எப்படி இருக்கு என கேட்டிருக்கிறார். இப்போ பரவாயில்ல சார் என சொன்ன நவீனிடம் தம்பி ஏன் இப்படி செஞ்ச? காதலிச்ச பொண்ண இப்படி பண்ணலாமா? கேள்வியை கேட்டுள்ளார். அதற்கு, லாவண்யாவும் நானும் எட்டாவது படித்ததிலிருந்து காதலித்துவந்தோம். அவளைப் பார்க்கவே அவள் வீடு உள்ள தெருவிலிருக்கும் டீயூஷனுக்கு போயிட்டு வருவேன் என கூறியிருக்கிறார்.

அடுத்ததாக, அவள் கழுத்தை அறுக்கும் அளவுக்கு உங்களுக்குள் அப்படிஎன்னதான் பிரச்சனை? ஏன் உங்களுக்குள்ள இப்படி ஒரு மோதல்? எனக் கேட்டதற்கு,  நல்லாதான் இருந்தா! அவ தோழி ஒருத்தி இருக்கிறா அவதான் சூனியக்காரி, அவள்தான் லாவண்யாவிடம் அவனை நீ திருமணம் செய்வது எனக்குப் பிடிக்கவில்லை. அவன் கேரக்டரே சரியில்லை என்று சொல்லியிருக்கிறாள். இதை லாவண்யா என்னிடம் சொல்லிவிட்டார். லாவண்யாவின் தோழிதான் எங்களைப் பிரிக்க சூழ்ச்சி செய்திருக்கிறார். சமீபகாலமாகத்தான் அவள் என்னிடம் சரியாக பேசாமலும் தவிர்த்துவந்தாள் எனக் கோபம் கொந்தளிக்க பேசியிருக்கிறார்.

தம்பி நீயும் தாறுமாறா கழுத்த கிழிச்சிருக்க, இப்போ நீங்க  ரெண்டு பேரும் செத்து பிழைச்சிருக்கிங்க இதுக்கப்புறமும் அந்தப் பெண்ணை கல்யாணம் பண்ணிப்பியா? என கேட்டதற்கு... சிறிது நேரம் மௌனமாக இருந்த நவீன், லாவண்யா நன்றாக படிக்க வேண்டும் என்று நினைத்துத்தான் நிறையச் செலவு பண்ணினேன் என பதில் சொன்னாராம்.

PREV
click me!

Recommended Stories

தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பிருக்கா? பனியின் தாக்கம் எப்படி இருக்கும்? வானிலை அப்டேட் இதோ!
வாட்ஸ்அப்பில் வந்த வில்லங்கம்.. டிஜிட்டல் கைது செய்வதாக மிரட்டி ரூ.52 லட்சம் அபேஸ்!