எங்களுக்கு ஒரு திறமையான போட்டியாளர் வந்துள்ளார்; நடிகர் விஜய்யின் அரசியல் குறித்து நமீதா ஓபன் டாக்

By Velmurugan s  |  First Published Apr 9, 2024, 3:15 PM IST

நடிகர் விஜய் மிகவும் புத்திசாலி. அவர் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன். அவர் அரசியலுக்கு வருவதால் எங்களுக்கு திறமையான போட்டியாளர் வந்துள்ளதாக நினைக்கிறேன் என நடிகை நமீதா தெரிவித்துள்ளார்.


நாடாளுமன்றத் தேர்தலில் நீலகிரி தொகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் மத்திய இணை அமைச்சர் எல் முருகன் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக நடிகை நமிதா இன்று திருப்பூர் திருமுருகன்பூண்டி பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு பகுதிக்குச் சென்று மத்திய அரசின் திட்டங்களால் பயன் அடைந்த பயனாளிகளை சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அடுக்குமாடி குடியிருப்பில் குடியிருந்து வரும் வீட்டிற்குச் சென்ற அவர் வீட்டில் உள்ள வசதிகள் மற்றும் அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்து கேட்டு அறிந்தார். 

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் இதுவரை ஆண்ட கட்சிகள் யாராவது மக்களுக்கு வீடு கொடுத்துள்ளார்களா? மத்திய அரசு ஒவ்வொரு தனி நபருக்கும் இந்தியா முழுவதும் வீடு கொடுத்துள்ளது. வீடு மட்டுமல்லாமல் குடிநீர் வசதி, மின்சார வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்து கொடுத்துள்ளது. திமுக 234 தொகுதிகளில் மக்களை சந்தித்து அவர்களின் தேவைகளை கேட்டுள்ளதா ? ஆனால் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அனைத்து தொகுதிகளிலும் மக்களை நேரடியாக சந்தித்து அவர்களின் அடிப்படை தேவைகளை கேட்டுள்ளார். 

Tap to resize

Latest Videos

undefined

பேரு வைக்க சொன்னது ஒரு குத்தமா? பிறந்த குழந்தையை எம்எல்ஏ., எம்பி ஆக்குவோம் என உறுதி அளித்த அதிமுகவினர்

திமுக மக்களை பிரித்தாளும் முயற்சியில் இறங்கியுள்ளது. ஆனால் அவர்கள் தோல்வி உறுதி செய்யப்பட்டுள்ளது. காட்டில் யானையை எதிர்க்க சிறு சிறு மிருகங்கள் எவ்வாறு ஒன்று சேருமோ அது போல இந்தியா கூட்டணியில் கட்சிகள் சேர்ந்துள்ளன. இருப்பினும் அவர்களால் மோடி என்னும் பெரும் மனிதரை தோற்கடிக்க முடியாது.‌ விஜய் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன். அவர் ஒரு புத்திசாலி. திறமையான போட்டியாளர் உருவாவதாக நினைக்கிறோம்.

கச்சத்தீவு விவகாரத்தில் பிரதமர் மோடி மீண்டும் வெற்றி பெற்று நல்ல நடவடிக்கையை மேற்கொள்வார் என தெரிவித்தார். நிகழ்வின் போது பாஜகவின் நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். குடியிருப்பு பகுதிக்கு வந்த நமிதாவுடன் குடியிருப்பு வாசிகள் போட்டோ எடுத்துக்கொள்ள ஆர்வம் காட்டினர்.

click me!