
நடிகை நந்தினி அடியாட்களை வைத்து மிரட்டி தன் மகனை திருமணம் செய்து கொண்டதாக மாமியார் சாந்தி புகார் தெரிவித்துள்ளார்.
வம்சம், கேடி பில்லா கில்லாடி ரங்கா திரைப்படத்திலும் சின்னத்திரையில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருப்பவர் நடிகை நந்தினி. இவருக்கும் வளசரவாக்கத்தை சேர்ந்த கார்த்திகேயன் என்பவருக்கும் கடந்த 8 மாதத்திற்கு முன் திருமணம் நடைபெற்றது.
கார்த்திக் தி. நகரில் ஜிம் நடத்தி வந்துள்ளார். இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டனர். வெண்ணிலா என்ற பெண்ணை முதலாவது திருமணம் செய்துள்ள கார்த்திக் அவர் தற்கொலை செய்து கொள்ளவே நந்தினியை இரண்டாம் திருமணம் செய்து கொண்டுள்ளார்.
இது குறித்து விருகம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது கார்த்திக் எழுதிய கடிதம் போலீசாருக்கு கிடைத்தது. அக்கடிதத்தில் கார்த்திக் தனது மனைவியின் தந்தை ராஜேந்திரன் மற்றும் நந்தினி ஆகியோரின் டார்சரால் தான் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் கார்த்தியின் தாய் சாந்தி தன் மகனின் தற்கொலைக்கு காரணமான நடிகை மற்றும் அவரது தந்தை மீது நடவடிக்கை எடுக்க கோரி காவல் நிலையத்தில் புகார் அளிக்க உள்ளதாக தெரிவித்தார்.
தற்கொலை செய்து கொண்ட கணவரின் முகத்தை இதுவரை பார்க்க கூட நந்தினி வரவில்லை என்றும் கூறியுள்ளார்.