"தமிழகத்தில் மருத்துவ கலந்தாய்வை உடனடியாக நடத்த வேண்டும்" - உச்சநீதிமன்றத்தில் நளினி சிதம்பரம் வழக்கு!!

First Published Aug 16, 2017, 11:23 AM IST
Highlights
nalini chidambaram case on mbbs counselling


தமிழகத்தில் உடனடியாக மருத்துவ கலந்தாய்வு நடத்த உத்தரவிடக்கோரி வழக்கறிஞரும், முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்வில் இருந்து ஓர் ஆண்டு விலக்கு அளிக்ககோரி, தமிழக அவசர சட்டம் ஒன்றை பிறப்பித்து, மத்திய அரசின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மத்திய அரசு இன்று முடிவு செய்து அறிவிப்பு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நடவடிக்கைகளால் இந்த ஆண்டு மருத்துவ கலந்தாய்வு நடத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்த மாத இறுதிக்குள் மருத்துவ கலந்தாய்வை நடத்தி முடிக்க வேண்டும் என இந்திய மருத்துவ கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.

தற்போது நீட் தேர்வில் இருந்து ஓர் ஆண்டுக்கு விலக்கு அளிக்கும் உத்தரவை மத்திய அரசிடம் இருந்தது தமிழக அரசு எதிர்பார்த்து காத்திருக்கிறது.

இந்நிலையில் தமிழகத்தில் மருத்துவ கலந்தாய்வை உடனடியாக நடத்த உத்தரவிட வேண்டும் என வழக்கறிஞரும், முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது.

click me!