
சிவகங்கை
நகராட்சி உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்களை நகராட்சி ஆணையர் திட்டியதைக் கண்டித்து ஆசியர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி இராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் ஆசிரிய, ஆசிரியைகள் நேற்று வகுப்புகளைப் புறக்கணித்து உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினர்.
இந்தப் பள்ளியில் சில நாள்களுக்கு முன்னர் பெற்றோர்கள் – ஆசிரியர்கள் சந்திப்புக் கூட்டம் நடைப்பெற்றது. இதில், பள்ளியில் கழிப்பறை வசதி ஏற்படுத்த பணிகள் நடந்துள்ளது. அப்போது அங்கு வந்த நகராட்சி ஆணையர் நகராட்சியின் அனுமதியின்றி பணி செய்யக் கூடாது என்று மிரட்டி ஆசிரியர்களைத் திட்டியுள்ளார்.
இதனைக் கண்டித்து நேற்று காலை வகுப்புகளைப் புறக்கணித்து 30 ஆசிரியர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்து வந்த தேவகோட்டை மாவட்ட கல்வி அலுவலர் மாரிமுத்து போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்
இதுகுறித்து ஆட்சியரிடம் முறையிட்டு நடவடிக்கை எடுக்கலாம் என்று முடிவெடுத்ததால் ஆசிரியர்கள் போராட்டத்தைக் கைவிட்டு வகுப்புகளுக்குச் சென்றனர்.