
அரக்கோணம்
அதிக அளவில் விபத்துகள் நடைபெறும் பகுதியான அரக்கோணத்தில் சாலை பாதுகாப்பை வலியுறுத்தி, தனியார் அமைப்பு ஒன்று மோட்டார் சைக்கிள் விழிப்புணர்வு ஊர்வலத்தை நடத்தியது.
அரக்கோணத்தில் எம்.ஆர்.எப். என்னும் தனியார் தொழிற்சாலை மற்றும் ரோட்டரிச் சங்கம் சேர்ந்து சாலை பாதுகாப்பை வலியுறுத்தும் விதமாக மோட்டார் சைக்கிள் விழிப்புணர்வு ஊர்வலத்தை நடத்தியது.
இந்த ஊர்வலத்திற்கு ரோட்டரி சங்கத் தலைவர் கே.பி.கே.பிரபாகரன் தலைமை வகித்தார். அடுத்த ஆண்டின் தலைவர் பி.இளங்கோ, ரோட்டரி சமூக நல இயக்குனர் ஆர்.வெங்கட்ரமணன், சந்துரு, மணி, செந்தில்குமார், ஐ.அந்தோணிசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ரோட்டரிச் சங்கத்தின் செயலாளர் சிவகுமார் வரவேற்றார்.
எம்.ஆர்.எப். உற்பத்தி பிரிவு பொது மேலாளர் இசக்கிராஜன், அரக்கோணம் தாலுகா காவல் ஆய்வாளார் அண்ணாதுரை, உதவி ஆய்வாளர் பாஸ்கரன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றுப் பேசினர்.
இந்த ஊர்வலமானது அரக்கோணம் பழைய பேருந்து நிலையம் தொடங்கி, அரக்கோணம் அருகே இச்சிப்புத்தூரில் உள்ள எம்.ஆர்.எப். தனியார் தொழிற்சாலை வரை சென்று முடிந்தது
மேலும், இந்த ஊர்வலத்தில், எம்.ஆர்.எப். பாதுகாப்பு குழு தலைவர்கள் ஜோஸ் அல்போன்ஸ், அல்போன்ஸ், குழு உறுப்பினர்கள், ரோட்டரி சங்க நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டு தங்களது பங்களிப்பை வழங்கினர்.
இந்த ஊர்வலத்தில் பங்கேற்றவர்கள், சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை மக்களுக்கு வழங்கினர்.