மீனவர்கள் கரை திரும்ப புதுவழி முயற்சி - கையில் மெழுவர்த்தி ஏந்தி பிரார்த்தனை...!

 
Published : Dec 10, 2017, 08:44 PM ISTUpdated : Sep 19, 2018, 01:35 AM IST
மீனவர்கள் கரை திரும்ப புதுவழி முயற்சி - கையில் மெழுவர்த்தி ஏந்தி பிரார்த்தனை...!

சுருக்கம்

More than a thousand fishermen from the fishermen carrying candles in the back of the fishermen who are missing by the storm are praying on the beach.

புயலால் காணாமல் போன மீனவர்கள் கரை திரும்ப கையில் மெழுகுவர்த்தி ஏந்தி பூந்துறையை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடற்கரையில் பிரார்த்தனை மேற்கொண்டு வருகின்றனர். 

கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒகி புயலால் பாதிக்கப்பட்டு கன்னியாகுமரி மாவட்டமே தண்ணீரில் தத்தளித்தது. மேலும் ஆழ்கடலுக்கு மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் பலர் மாயமாயினர். 

புயலால் பல்வேறு மாநிலங்களில் கரை ஒதுங்கியுள்ளதாக தகவல்களும் வெளியாகியது. இதனால் அவரகளை மீட்க தமிழக அரசு கப்பல் படையையும் கடலோர காவல் படையையும் களமிறக்கியுள்ளது. 

ஆனால் ஆழ்கடல் பகுதியில் காணாமல் போன மீனவர்களை கரை பகுதியிலேயே தேடுகின்றனர் என கூறி மீனவர்களின் உறவினர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். 

மேலும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் வந்து தங்களை சந்திக்க வேண்டும் என கூறி ஏராளமான மீனவர்கள் 15 க்கும் மேலான நாட்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இதனிடையே பூந்துறையில் காணாமல் போன மீனவர்கள் கரை திரும்ப அப்பகுதி மீனவர்கல் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி பிரார்த்தனையில் ஈடுபட்டு வருகின்றனர். 

மேலும் பகலில் கரையின் தூரத்தை கணிக்க மாயமான மீனவர்களால் முடியாது எனவும் எனவே இரவு நேரங்களில் மெழுகுவர்த்தின் ஒளியை கொண்டு கரை திரும்ப வழி வகுக்கலாம் என்ற நம்பிக்கையோடு இந்த போராட்டத்தில் இறங்கியுள்ளதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர். 

PREV
click me!

Recommended Stories

தவெக கூட்டத்தில் உணவு கிடையாது.. தண்ணீர் பாட்டில் மட்டும்தான்.. செங்கோட்டையன் விளக்கம்
தொடர் விடுமுறை.. சொந்த ஊர் போறீங்களா?.. போக்குவரத்துக்கழகம் சொன்ன குட்நியூஸ்..!