
திருச்சியில் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் பேருந்து மறியலில் ஈடுபட்ட திமுகவினர் கைது செய்யப்பட்டனர்.
விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் திமுக தலைமையில் எதிர்க்கட்சிகள் முழு அடைப்பு போராட்டத்தை நடத்தி வருகின்றனர். சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் வணிக நிறுவனங்கள் அடைக்கப்பட்டுள்ளன.
நாள் ஒன்றுக்கு லட்சம் பேர் வந்து செல்லும் கோயம்பேடு காய்கறிச்சந்தை அடைக்கப்பட்டுள்ளது. முழு அடைப்புக்கு சி.ஐ.டி.யு, தொ.மு.ச. உள்ளிட்ட தொழிற்சங்களும் ஆதரவு தெரிவித்துள்ளதால் குறைந்த அளவிலான பேருந்துகளே இயக்கப்பட்டு வருகின்றன.
ஆயிரத்திற்கும் அதிகமான ஷேர் ஆட்டோக்கள் இயக்கப்படவில்லை. தமிழகம் முழுவதும் ஆங்காங்கே திமுகவினர் பேருந்துகளை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருச்சியில் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் திமுகவினர் பேருந்துகளை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து அங்கு வந்த போலீசார் ஆயிரத்திற்கும் அதிகமான திமுகவினரை கைது செய்தனர்.