பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை.. சென்னைக்கு 15 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்..

Published : Jun 26, 2022, 05:11 PM IST
பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை.. சென்னைக்கு 15 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்..

சுருக்கம்

பருவமழை தொடங்கவுள்ள நிலையில் சென்னை மாநகராட்சியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் கண்காணிக்கவும் 15 மண்டலங்களுக்கும் தலா ஒரு ஐ.எ.எஸ் அதிகாரியை நியமனம் செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது.    

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளை கண்காணிக்க 15 ஐஏஎஸ் அதிகாரிகளை கண்காணிப்பு அலுவலர்களாக நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

மேலும் படிக்க:நாளை பிளஸ் 1 ரிசல்ட்.. மாணவர்கள் எந்த இணையதளத்தில் முடிவுகளை பார்க்கலாம்..? அதிகாரபூர்வ அறிவிப்பு

தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,”வடகிழக்கு பருவ மழையை முன்னிட்டு சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் கண்காணிப்பு மற்றும் மேற்பார்வை பணிகளை மேற்கொள்ள ஆண்டுதோறும் மண்டல வாரியான அலுவலர்களை நியமனம் செய்யப்படுவார்கள். இதன்படி இந்தாண்டு சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களுக்கும் தலா ஒரு ஐஏஎஸ் அதிகாரி என 15 ஐஏஎஸ் அதிகாரிகளை கண்காணிப்பு மற்றும் மேற்பார்வை அலுவலர்களாக தமிழக அரசு நியமித்துள்ளது. 

15 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளின் விவரம்:-

திருவெற்றியூர் மண்டலம்: சரவண குமார் ஜவாத் 

மணலி மண்டலம்: கணேசன் 

மாதவரம் மண்டலம்: சந்தீப் நந்தூரி 

தண்டையார்பேட்டை மண்டலம்: வினய் 

ராயபுரம் மண்டலம்: விஜய கார்த்திகேயன் 

திரு.வி.க.நகர் மண்டலம்: ரன்ஜீத் சிங் 

அம்பத்தூர் மண்டலம்: சுரேஷ் குமார் 

அண்ணா நகர் மண்டலம்: பழனிசாமி 

தேனாம் பேட்டை மண்டலம்: ராஜாமணி 

கோடம்பாக்கம் மண்டலம்: விஜயலட்சுமி 

வளசரவாக்கம் மண்டலம்: மணிகண்டன் 

ஆலந்தூர்: நந்தகோபால் 

அடையாறு மண்டலம்: நிஷாந்த் கிருஷ்ணா 

பெருங்குடி மண்டலம்: ரவி சந்திரன் 

சோழிங்கநல்லூர் மண்டலம்: வீரராகவ ராவ் 

ஆகிய 15 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

நாளை தவெக வில் சேருகிறார் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம்..! டெல்டாவை தட்டி தூக்க பக்கா ஸ்கெட்ச்
ஜி.கே.மணி மனுசனே இல்ல.. அப்பாவையும், என்னையும் பிரிச்சிட்டாரு.. போட்டுத் தாக்கிய அன்புமணி!