MK University: போட்டித்தேர்வு கூட எழுத முடியல..முடிவு வெளியாவதில் சிக்கல்..பல்கலைக்கழகம் மீது பகீர் புகார்..

Published : Feb 05, 2022, 03:39 PM ISTUpdated : Feb 05, 2022, 03:40 PM IST
MK University: போட்டித்தேர்வு கூட எழுத முடியல..முடிவு வெளியாவதில் சிக்கல்..பல்கலைக்கழகம் மீது பகீர் புகார்..

சுருக்கம்

மதுரை காமராசர் பல்கலைக்கழகத் தேர்வு முடிவு வெளியாவதில் தாமதம் காரணமாக முதுநிலை வகுப்புகளுக்கும், அரசு போட்டித் தேர்வுகளுக்கும் விண்ணப்பிக்க முடியவில்லை என மாணவர்கள் குற்றம் சாட்டினர்.  

மதுரை காமராசர் பல்கலைக்கழகத் தேர்வு முடிவு வெளியாவதில் தாமதம் காரணமாக முதுநிலை வகுப்புகளுக்கும், அரசு போட்டித் தேர்வுகளுக்கும் விண்ணப்பிக்க முடியவில்லை என மாணவர்கள் குற்றம் சாட்டினர்.மதுரை காமராசர் பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வித் துறையில் இளநிலை, முதுநிலை, பட்டயப் படிப்பு என சுமார் 25-க்கும் மேற்பட்ட படிப்புகள் பயிற்றுவிக்கப்படுகின்றன. இப்பல்கலைக்கழகத்தின் தொலை நிலைக் கல்வியில் கடந்த 2018-ல் பல்வேறு இளநிலை, முதுநிலை படிப்புகளில் ஏராளமான மாணவ, மாணவிகள் பல்கலைக்கழகம் மற்றும் வெளியூர் பல்கலைக் கழகப் படிப்பு மையங்கள் மூலம் சேர்ந்துள்ளனர்.இவர்கள் இறுதி ஆண்டுத் தேர்வை நவ.2020-ல் எழுதி இருக்க வேண்டும்.கொரோனா பரவல் ஊரடங்கு காரணமாக ஆகஸ்டு 2021-ல் ஆன்லைன் மூலம் தேர்வு எழுதினர். இதற்கான முடிவு அக்டோபரில் வெளியாகும் என எதிர்பார்த்தனர். ஆனால் இதுவரை முடிவு வெளியிடப்படவில்லை.

இதன் காரணமாக முதுநிலை வகுப்புகளிலும், அரசு நடத்தும் பல்வேறு போட்டித் தேர்வு களுக்கும் விண்ணப்பிக்க முடியாமல் தவிப்பதாக பாதிக்கப்பட்ட மாணவர்கள் தெரிவித்தனர்.இது குறித்து பதிவாளர், தொலைநிலைக் கல்வி இயக்குநர், தமிழக முதல்வரின் தனிப்பிரிவு, உயர் கல்வி அமைச்சர், செய லாளர் உள்ளிட்டோருக்குப் புகார் மனுக்கள் அனுப்பியும், இதுவரை தேர்வு முடிவு வெளியாகவில்லை எனக் குற்றம் சாட்டினர்.

இதுக்குறித்து கல்லூரி நிர்வாகத்திடம் கேட்டபோது, 2019 தேர்வில் முறைகேடு புகார் எழுந்ததால் அது தொடர்பான விடைத்தாள்களைப் பிரித்து எடுப்பதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் விடைத்தாள்களை திருத்துவது தள்ளிபோனது. தற்போது கூடுதல் தேர்வாணையர் நியமிக்கப்பட்டு, விரைந்து திருத்தப்படுகிறது.2020 வரை விடைத்தாள்கள் திருத்தப்பட்டுள்ளன. சில தினங்களில் முதுநிலை படிப்புக்கான தேர்வு முடிவு அறிவிக்கப்படும். அடுத்தகட்டமாக இளநிலை வகுப்புகளுக்கான முடிவும் விரைந்து அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

PREV
click me!

Recommended Stories

மொத்தமாகப் பணிந்த எடப்பாடி..! பொதுக்குழுவில் இது மட்டும் நடந்தால் அதிமுகவே ஆட்சி அமைக்கும்..! அடித்துச் சொல்லும் ஆர்.எஸ். மணி..!
என்னையா முடக்க பாக்குறீங்க.. அதுஒருபோதும் நடக்காது.. திமுக அரசை அட்டாக் செய்து விஜய் ட்வீட்!