மீன்பிடி விசைப்படகுகளில் டிரான்ஸ்பாண்டர் பொருத்தும் பணியை தொடங்கி வைத்தார் முதல்வர்

By Velmurugan sFirst Published Dec 30, 2022, 2:47 PM IST
Highlights

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் அவசர காலங்களில் மீனவர்கள் தகவல்களை பரிமாறிக் கொள்ள ஏதுவாக நீலபுரட்சித் திட்டத்தின் கீழ், 18.01 கோடி ரூபாய் செலவில் 4997 மீன்பிடி விசைப்படகுகளில் டிரான்ஸ்பாண்டர்கள் பொருத்தும் திட்டத்தினை தொடங்கி வைத்தார்.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (ISRO) மீன்பிடி விசைப்படகுகளில் பொருத்திட மேம்படுத்தப்பட்ட டிரான்ஸ்பாண்டர்களை (Transponders) உருவாக்கியுள்ளது. நிலப்பரப்பிலிருந்து இந்த டிரான்ஸ்பாண்டர்கள் மூலம் படகுகளுடன் இருவழி செய்தி பரிமாற்றம் மேற்கொள்ளலாம். இக்கருவியை படகில் பொருத்தி, புளூடூத் (Blue tooth) வாயிலாக இக்கருவியை இணைத்து அலைபேசியில் உள்ள செயலி வழியாக (Mobile app) தகவல்களையும் பெறலாம். 

திமுக முன்னாள் எம்பி மஸ்தானை கொலை செய்துவிட்டு நாடகமாடிய 5 பேர் அதிரடி கைது

டிரான்ஸ்பாண்டர்களை மீன்பிடி விசைப்படகில் பொருத்துவதால், மீன்பிடி படகுகள் புயல், சூறாவளி மற்றும் பெருமழை போன்ற ஆபத்தில் இருக்கும்போது ஆழ்கடலில் இருந்து படகின் உரிமையாளருக்கும் மற்றும் மீன்வளத்துறையின் மத்திய கட்டுப்பாட்டு அறைக்கும் அவசர செய்தி அனுப்ப இயலும். அதேபோன்று, கரையிலுள்ள மீன்வளத்துறை, பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் படகு உரிமையாளர்கள் அவசர செய்தியை பெறவோ, அவசர செய்தியை படகிற்கு அனுப்பவோ இயலும்.  

அதுமட்டுமின்றி, அதிக மீன்கிடைக்கும் இடங்கள், காலநிலை, வானிலை நிலவரங்கள் ஆகியவற்றை அவ்வப்போது படகிற்கு அனுப்ப இயலும். மேலும், இக்கருவியின் மூலம் ஆழ்கடலில் படகு நிலைகொண்டுள்ள இடத்தை துல்லியமாக கண்டறிந்து ஆபத்து காலங்களில் உடனுக்குடன் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், படகு கடலில் பயணம் செல்லும் பாதையையும் கண்டறிய இயலும். 

புதுக்கோட்டையில் சர்ச்சைக்குள்ளான கோவிலில் சமத்துவ பொங்கல்; ஆட்சியருக்கு குவியும் பாராட்டு

அதன்படி அவசர காலங்களில் மீனவர்கள் தகவல்களை பரிமாறிக் கொள்ள ஏதுவாக நீலபுரட்சித் திட்டத்தின் கீழ், 18.01 கோடி ரூபாய் செலவில் தமிழ்நாட்டிலுள்ள 4997 மீன்பிடி விசைப்படகுகளில் டிரான்ஸ்பாண்டர்கள் பொருத்தும் திட்டத்தினை தொடங்கி வைக்கும் அடையாளமாக சென்னை, நாகப்பட்டினம், தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களைச் சார்ந்த 10 விசைப்படகு உரிமையாளர்களுக்கு  டிரான்ஸ்பாண்டர்களை வழங்கினார்.

click me!