மொழிச் சமத்துவத்தைக் குலைக்கும் செயல்: கட்டாய இந்தி தேர்வுக்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம்!

Published : Aug 23, 2023, 11:35 PM IST
மொழிச் சமத்துவத்தைக் குலைக்கும் செயல்: கட்டாய இந்தி தேர்வுக்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம்!

சுருக்கம்

ஒன்றியக் கல்வி அமைச்சகத்தின் கீழ் கல்வி நிறுவனங்களின் பணியிடங்களில் இந்தி மொழித் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளதற்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்

என்.ஐ.டி உள்ளிட்ட ஒன்றிய அரசின் கல்வி நிறுவனங்களில் ஆசிரியரல்லாத அலுவலர் நியமன தேர்வுகளில் இந்தி மொழித் தேர்வை கட்டாயம் ஆக்குகிற அறிவிக்கையை கடந்த 17ஆம் தேதி தேசிய தேர்வு முகமை (National Testing Agency) வெளியிட்டுள்ளது. அதில் இந்தி மொழித் தேர்வு கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. 20 சதவீதம் மற்றும் 30 சதவீதம் மதிப்பெண்கள் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழித் தேர்வுகளுக்கு தரப்பட்டுள்ளது. ஆங்கிலம், இந்தி என மதிப்பெண் விவரம் பிரித்து தரப்படவில்லை.

இந்தி பேசும் மாநிலங்களை சேர்ந்த மாணவர்கள் வாய்ப்புகளை அதிகரித்து இந்தி பேசாத மாணவர்களின் வாய்ப்புகளை கடுமையாக பாதிக்கக் கூடிய இந்த நடவடிக்கைக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், ஒன்றியக் கல்வி அமைச்சகத்தின் கீழ் கல்வி நிறுவனங்களின் பணியிடங்களில் இந்தி மொழித் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளதற்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

 

 

இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “தேசிய தொழில்நுட்பக் கழகங்கள் (NIT) மற்றும் ஒன்றியக் கல்வி அமைச்சகத்தின்கீழ் இயங்கும் பிற நிறுவனங்களில் உள்ள ஆசிரியரல்லாத பணியிடங்களுக்குத் தேசிய தேர்வு முகமை (NTA) இந்தி மொழித் தேர்வைக் கட்டாயமாக்கி இருப்பது மொழிச் சமத்துவத்தைக் குலைக்கும் செயலாகும். பன்முகத்தன்மையை அப்பட்டமாக அவமதிப்பதாகும். இவ்வாறு இந்தியைத் திணிப்பது தமிழ்நாடு உள்ளிட்ட பிற இந்தி பேசாத மாநில இளைஞர்களின் வாய்ப்புகளைப் பறிப்பதாக உள்ளது.” என கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேலும், நியாயமற்ற இந்தி மொழித் தேர்வை ரத்து செய்து, அனைவருக்குமான தேர்வாக இதனை மாற்ற வேண்டும் எனவும் முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

சந்திரயான்3 வெற்றி: விஞ்ஞானி வீரமுத்துவேலுவுக்கு செல்போனில் முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

வ.உ.சி. கப்பலில் வந்தே மாதரம்.. பாரதியார் பாடல் பாடி அசத்திய பிரதமர் மோடி!
தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர். பணியைக் கண்காணிக்க சிறப்பு பார்வையாளர்கள் நியமனம்!