ஒரு மாதத்தில் குற்றப்பத்திரிகை, கோவை வக்கிர மிருகங்களுக்கு உச்சபட்ச தண்டனை.. குமுறும் முதல்வர் ஸ்டாலின்

Published : Nov 04, 2025, 11:20 AM IST
Mk Staln

சுருக்கம்

கோவையில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகள் மீது ஒரு மாதத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, உச்சபட்ச தண்டனை பெற்றுத் தரப்படும் என முதல்வர் ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார்.

கோவையில் ஆண் நண்பருடன் பேசிக் கொண்டிருந்த கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை காவல் துறையினர் சுட்டு பிடித்தனர். இந்நிலையில் இது தெடார்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கருததை வெளிப்படுத்தி உள்ளார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், “கோவையில் இளம்பெண்ணுக்கு நிகழ்ந்த துயரம் மனிதத்தன்மையற்றது; இத்தகைய கொடூர குற்றச் செயல்களைக் கண்டிக்க எந்தக் கடுஞ்சொல்லும் போதாது.

இதில் ஈடுபட்ட குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு, உடனடியாகக் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒரு மாதத்திற்குள் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்து, அவர்களுக்கு அதிகபட்ச தண்டனையை விரைந்து பெற்றுத் தர, காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளேன்.

மேலும் மேலும் நம் மகளிர் அனைத்துத் துறைகளிலும் அடையும் முன்னேற்றம்தான் இத்தகைய வக்கிர மிருகங்களின் ஆணாதிக்க மனநிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கும்; முழுமையான முற்போக்குச் சமூகமாக நாம் மாறுவதற்கு வழிவகுக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

 

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

அட! 2026 தேர்தலுக்கு இப்போதே ரெடி! நாம் தமிழர் கட்சியின் 100 வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட சீமான்!
விடாது கருப்பு..! துவண்டு கிடந்த ஓ.பி.எஸுக்கு துணிச்சல் கொடுத்த அமித் ஷா..! அதிமுவில் மீண்டும் அதிகார ஆடுபுலி ஆட்டம்..!