ரேஷன் கடையில் சிறுதானியங்கள்..! இரண்டு மாவட்டங்களில் சோதனை முறையில் அறிமுகம்- சக்கரபாணி அறிவிப்பு

By Ajmal KhanFirst Published Nov 3, 2022, 2:56 PM IST
Highlights

ஜனவரி மாதம் முதல்  தர்மபுரி நீலகிரி ஆகிய இரண்டு மாவட்டங்களில் சிறுதானியங்கள் சோதனை முறையில் நியாயவிலை கடைகளில் விநியோகம் செய்யபட உள்ளது. பொதுமக்களின் வரவேற்பை பொறுத்து மற்ற மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தப்படும் என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். 
 

நெல் கொள்முதல்

சென்னை தலைமைச்செயலகத்தில், உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி பொது விநியோகத்திட்ட கடைகளை ஆய்வு செய்யும் அலுவலர்களுக்கான செயலியினை அறிமுகம் செய்து வைத்தார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், இந்த செயலி மூலம் மாதம் தோறும் நியாவிலைக்கடைகள் செய்ய வேண்டிய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் மக்களுக்கு சிறந்த சேவையை அளிக்க முடியும் எனவும் தெரிவித்தார். கடந்த செப்டம்பர் 1 ம் தேதி முதல் நவம்பர் 2 ம் தேதி வரை 8 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு சுமார் 42,000 கோடி ரூபாய் விவசாயிகளுக்கான நிலுவை தொகை வழங்கப்பட்டுள்ளதாக கூறினார்.  இந்த ஆண்டு 2,16,000 மெட்ரிக் டன் கூடுதலாக நெல் கொள்முதல் செய்யப்பட்டு உள்ளதாகவும், டெல்டா மாவட்டங்களில் மட்டும் 75 சதவிகிதம் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார். 

மக்களே உஷார் !! சென்னையில் நாளைக்கு அடித்து ஊற்றுமா மழை..? சுட சுட வெளிவந்த வெதர் அப்டேட்..

ரேசன் கடையில் சிறு தாணியங்கள்

நெல்லுக்கு  22 சதவிகித ஈரபதத்தை உயர்த்தி தர தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ள நிலையில்  17 சதவிகிதத்திலிருந்து 19 சதவிகிதம் என்கிற அளவில் மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவித்தார். நியாயவிலை கடைகளில் 98.3 சதவிகிதம் பேர் பயோ மெட்ரிக் முறையில் பொருட்களை வாங்கி வருகிறார்கள் எனவும் திருவல்லிக்கேணி , அரியலூர் மாவட்டங்களில் சோதனை முறையில் கருவிழி ஸ்கேனர் மூலம் பொருட்கள் விநியோகிக்கபட்டு வருவதாக குறிப்பிட்டார். விரைவில் தமிழகம் முழுவதும் இந்த திட்டம் செயல்படுத்த முதல்வரிடம் பரிந்துரைக்கப்படும் என தெரிவித்தார். ஜனவரி மாதம் முதல்  தர்மபுரி நீலகிரி ஆகிய இரண்டு மாவட்டங்களில் சிறுதானியங்கள் சோதனை முறையில் நியாயவிலை கடைகளில் விநியோகம் செய்யபட உள்ளது. பொதுமக்களின் வரவேற்பை பொறுத்து மற்ற மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தப்படும் என கூறினார்.

இதையும் படியுங்கள்

முட்டையின் விலை திடீர் உயர்வு.. அசைவ பிரியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய விலை .. எவ்வளவு தெரியுமா..?

click me!