பொங்கல் பரிசு தொகுப்பு எப்போது வழங்கப்படும்? தேதியை அறிவித்தார் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி!!

By Narendran S  |  First Published Jan 7, 2023, 12:11 AM IST

தமிழகத்தில் ஜன.9 ஆம் தேதி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் 1000 ரூபாய் ரொக்கம் வழங்கப்படும் என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். 


தமிழகத்தில் ஜன.9 ஆம் தேதி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் 1000 ரூபாய் ரொக்கம் வழங்கப்படும் என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக முழுவதும் பொங்கல் தொகுப்பு வழங்க 80% டோக்கன்கள் வழங்கப்பட்டுள்ளது. வரும் 9 ஆம் தேதி சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணியை துவக்கி வைக்கிறார்.

இதையும் படிங்க: அனைத்து மாவட்டங்களிலும் புத்தக கண்காட்சி நடத்த ரூ.5.50 கோடி நிதி ஒதுக்கீடு... முதல்வர் மு.க.ஸ்டாலின் தகவல்!!

Tap to resize

Latest Videos

undefined

அதேபோல் அன்றைய தினமே தமிழக முழுவதும் குடும்ப அட்டைதாரர்களுக்கும், இலங்கை தமிழர் குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பும் மற்றும் 1000 ரூபாய் ரொக்கமும் வழங்கப்படும். தமிழக முழுவதும் 103 திறந்தவெளி நெல் சேமிப்பு கிடங்கு உள்ள நிலையில் மழையினால் நெல் சேதம் அடையும் நிலை ஏற்படுவதை தடுக்க திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அதற்காக 238 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு 2 லட்சத்து 86 ஆயிரத்துத்து 450 மெட்ரிக் டன் நெல் சேமிக்கும் வகையில் மதுரை கப்பலூரில் புதிதாக சேமிப்பு கிட்டங்கி கட்டப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க: 12 ஆம் வகுப்பு அரசு பள்ளி மாணவர்களுக்கு இ-மெயில் ஐடி கட்டாயம்... உத்தரவு பிறப்பித்தது பள்ளிக்கல்வித்துறை!!

அதற்கான கட்டுமான பணிகள் முழுவதும் முடிந்துள்ள நிலையில் விரைவில் முதல்வரால் திறக்கப்பட உள்ளது. தற்போது நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்படும், நெல்கள் உடனடியாக அந்தந்த அரவை ஆலைக்கு அனுப்புவதற்கு உரிய டெண்டர் கோரப்பட்டுள்ளது. இனி விவசாயிகளின் நெல் மழையில் நனைந்து வீணாகாது. அதிமுக ஆட்சியில் கரும்புக்கு ரூ.30 கொடுக்கப்பட்டு வந்த நிலையில் திமுக ஆட்சியில் தற்போது 33 ரூபாய் வழங்கப்படுகிறது. இது 10% உயர்வு என்று தெரிவித்தார். 

click me!