மானிய விலையில் தீவனம்.. விரைவில் பால் கொள்முதல் உயர்வு.. அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்..

By Thanalakshmi VFirst Published Jun 19, 2022, 11:03 AM IST
Highlights

தமிழகத்தில் பால் கொள்முதல் விலையை உயர்த்துவது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் முடிவு எடுப்பார் என்று பால்வளத்துறை அமைச்சர் நாசர் தெரிவித்தார்.
 

நாமக்கல்லில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்ட பாலவளத்துறை அமைச்சர் நாசர் பேசிய போது, ” திமுக ஆட்சி பொறுப்பேற்றுவுடன் ஒரு ஆண்டில் மாநில அளவில் ஆவின் மூலம் தற்போது நாள் ஒன்றுக்கு 43 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. கடந்த ஆட்சி காலத்தில் 33 முதல் 35 லட்சம் லிட்டர் வரை மட்டுமே பால் கொள்முதல் செய்யப்பட்டது என்று தெரிவித்தார்.

அதுமட்டுமின்றி பால் விலையை லிட்டருக்கு ரூ.3 குறைத்துள்ளதால் பால் விற்பனை அதிகரித்து, நாள் ஒன்றுக்கு 26 முதல் 28 லட்சம் லிட்டர் பால் விற்பனை செய்யப்படுகிறது. மீதமுள்ள பாலை கொண்டு, பால் பவுடர், பால் கோவா, நறுமணப்பால், ஸ்வீட் வகைகள் உள்ளிட்ட உபபொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன என்று அமைச்சர் தெரிவித்தார்.

மேலும் படிக்க: OPS vs EPS : நள்ளிரவு வரை நீடித்த ஆலோசனை..!ஒற்றை தலைமை தனி தீர்மானம் தயார்...! பொருளாளர் ஆகிறாரா ஓபிஎஸ்..?

ஆவினுக்கும் நாள் ஒன்றுக்கு மட்டும் ரூ.85 லட்சம் வீதம், ஆண்டுக்கு ரூ.270 கோடி வரையில் நஷ்டம் ஏற்படுகிறது என்றும் கூறிய அமைச்சர், ஆனாலும் தொடந்து மக்களுக்கு தரமான பால் மற்றும் பால் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது என்றார். 
ஒரு கிலோ பால் பவுடர் உற்பத்தி செய்ய 12 லிட்டர் பால் தேவைப்படுகிறது. ஒரு லிட்டர் பாலுக்கு ரூ.32 வழங்குவதால், அதன்படி கணக்கீட்டால் ரூ.384 செலவாகிறது. 

ஆனால் ஒரு கிலோ பால் பவுடர் ரூ.211க்கு மட்டுமே விற்பனை செய்யப்படுவதால், போக்குவரத்து செலவை எல்லாம் கணக்கிட்டால் ஒரு கிலோ பால் பவுடருக்கு ரூ.40 வீதம் நஷ்டம் ஏற்படுகிறது என்று அமைச்சர் விளக்கினார். இதனிடையே பால் உற்பத்தியாளர்களிடம் கொள்முதல் செய்யப்படும் பாலின் விலையை உயர்த்துவது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் முடிவு எடுப்பார் என்றும் அவர் தெரிவித்தார்.

அதுமட்டுமின்றி பால் உற்பத்தி விலையை அதிகரிக்கும் வகையில் மானிய விலையில் தீவனம் வழங்க வேண்டும் என்று பால் உற்பத்தியாளர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்துள்ளனர். இது சம்பந்தமாக வரும் 27-ம்தேதி தமிழக முதல்வர் தலைமையில் நடைபெற உள்ள ஆய்வுக்கூட்டத்தில் ஆலோசனை செய்து முதல்வர் நடவடிக்கை எடுப்பார் என்று அமைச்சர் கூறினார்.

மேலும் படிக்க: கார்த்தி ரசிகர்மன்ற நிர்வாகிகளை தாக்கிய போலீசாருக்கு 2 லட்சம் அபராதம்.. எதற்கு தெரியுமா ?

click me!