Viral video : பால் அபிஷேகம் செய்து வரவேற்கப்பட்ட இருளர் சமூகத்தினர்… பெரம்பூர் பணிமனையில் ருசிகரம்!!

Published : Dec 11, 2021, 05:30 PM IST
Viral video : பால் அபிஷேகம் செய்து வரவேற்கப்பட்ட இருளர் சமூகத்தினர்… பெரம்பூர் பணிமனையில் ருசிகரம்!!

சுருக்கம்

சென்னை பெரம்பூரில் உள்ள பணிமனையில் இருளர் சமூகத்தை சேர்ந்த இருவர் அரசு பேருந்தில் ஏற வருகை புரிந்தனர். அவர்களின் கால்களில் பால் அபிஷேகம் செய்து சந்தனம், குங்குமம் வைத்து ஓட்டுநரும், நடத்துநரும் வரவேற்றுள்ளனர். இதையடுத்து அவர்களுக்கு மாலை அணிவித்து வணக்கம் செலுத்தி பேருந்தில் அமர வைத்துள்ளனர். இதுதொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. 

சென்னை பெரம்பூரில் உள்ள பணிமனையில் இருளர் சமூகத்தை சேர்ந்த இருவர் அரசு பேருந்தில் ஏற வருகை புரிந்தனர். அவர்களின் கால்களில் பால் அபிஷேகம் செய்து சந்தனம், குங்குமம் வைத்து ஓட்டுநரும், நடத்துநரும் வரவேற்றுள்ளனர். இதையடுத்து அவர்களுக்கு மாலை அணிவித்து வணக்கம் செலுத்தி பேருந்தில் அமர வைத்துள்ளனர். இதுதொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. அண்மையில் கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே வாணியக்குடி மீனவ கிராமத்தை சேர்ந்த செல்வ மேரி, மீன்களை விற்பனை செய்துவிட்டு இரவு குளச்சல் பேருந்து நிலையத்தில் வாணியக்குடி செல்லும் அரசு பேருந்தில் ஏறியுள்ளார். இவரை கண்ட பேருந்து நடத்துனர் மற்றும் ஓட்டுநர் ஆகியோர் அவர் மீது துர்நாற்றம் வீசுவதால் பேருந்தில் பயணிக்க முடியாது என கூறி பேருந்தில் இருந்து இறக்கி விட்டுள்ளனர்.

இதனால் வீட்டிற்கு செல்ல வழியில்லாமல் தவித்த மூதாட்டி விரக்தியில் பேருந்து நிலைய நேர கட்டுப்பாட்டு அலுவலகம் முன் சென்று இது என்ன ஞாயம் பேருந்தில் ஏறிய பொம்பளையை எப்படி இறக்கி விடலாம் பெட்டிசன் கொடுப்பேன் கத்தி கூச்சலிட்டதோடு தனது ஆதங்கத்தை அங்கு நின்ற பொதுமக்களிடம் கொட்டி தீர்த்தார். இதை அடுத்து கன்னியாகுமரி மாவட்டம்  குளச்சலில் துர்நாற்றம் வீசுவதாக மீனவ மூதாட்டி செல்வ மேரி பேருந்தில் இருந்து இறக்கி விட்ட பேருந்து ஓட்டுநர் மைக்கேல், நடத்துனர் மணிகண்டன், மூதாட்டியின் புகாருக்கு நடவடிக்கை எடுக்காத நேர காப்பாளர் ஜெயக்குமார் ஆகியோரை போக்குவரத்து துறை பொது மேலாளர் அரவிந்த் தற்காலிக பணி நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தார். இந்த சம்பவம் நிகழ்ந்த அடுத்த 2 நாட்களில் நாகர்கோவில் அருகே அரசு பேருந்தில் பயணித்த நரிக்குறவர் குடும்பத்தினரை பாதிவழியிலியே இறக்கிவிட்ட வீடியோ வைரலானது. 

இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர். இதை அடுத்து, ஓட்டுனர் மற்றும் நடத்துனர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தொடந்து அடித்தட்டு மக்கள் இதுபோன்ற இன்னல்களை சந்தித்து வரும் நிலையில் சென்னை பெரம்பூரில் உள்ள பணிமனையில் இருளர் சமூகத்தை சேர்ந்த இருவர் அரசு பேருந்தில் ஏற வருகை புரிந்தனர். அவர்களின் கால்களில் பால் அபிஷேகம் செய்து சந்தனம், குங்குமம் வைத்து ஓட்டுநரும், நடத்துநரும் வரவேற்றுள்ளனர். இதையடுத்து அவர்களுக்கு மாலை அணிவித்து வணக்கம் செலுத்தி பேருந்தில் அமர வைத்துள்ளனர். இதுதொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

"

முன்னதாக செங்கல்பட்டு அருகே கோயிலில் அன்னதானம் வாங்க சென்ற நரிக்குறவ பெண்ணான அஸ்வினி அவமதிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக அப்பெண் பேசிய வீடியோ பெரிதும் வைரலானது. இதையடுத்து அஸ்வினி உடன் அமர்ந்து அமைச்சர் சேகர் பாபு உணவு அருந்தினார். பின்னர் தீபாவளி அன்று அவரது வீட்டிற்கே சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆச்சரியத்தை ஏற்படுத்தினார். இதன் தொடர்ச்சியாக குறவர் சமூக மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் தமிழக அரசு சார்பில் வழங்கப்பட்டன. இந்த சூழலில் தான் பெரம்பூர் அருகே அரசு பேருந்தில் செல்ல வந்த இருளர் குடும்பத்தினரை பால் அபிஷேகம் செய்து வரவேற்றுள்ளனர்.

PREV
click me!

Recommended Stories

நெல்லை டூ பழனி, பொள்ளாச்சிக்கு புது ரயில் வந்தாச்சு.. பயணிகள் குஷி! அட்டவணை என்ன?
திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற மக்கள் தயாராகிவிட்டனர்.. திருச்சியில் பிரதமர் மோடி சூளுரை..