தலைமை செயலர் சொன்ன ஒரு வார்த்தை.. அலர்ட் ஆன ஐ.ஏ.எஸ் அதிகாரிகள்..!

By Thanalakshmi VFirst Published Dec 11, 2021, 3:20 PM IST
Highlights

பணியில் உள்ள ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் தங்கள் சொத்து விவரங்களை அடுத்த மாதத்திற்குள் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என்று தலைமை செயலர் இறையன்பு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
 

மத்திய அரசின் உத்தரவு படி ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் தங்கள் சொத்து விவரங்களை ஆண்டிற்கு ஒரு முறை அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும். அதன் அடிப்படையில் தற்போது தமிழக தலைமை செயலர் இறையன்பு , ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு ஆன்லைன் மூலமாக சொத்து விவரங்களை ஜனவரி 31 ஆம் தேதிக்குள் பதிவு செய்யமாறு கடிதம் எழுதியுள்ளார். அதில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மற்றும் அவர்களது குடும்பத்தின் பெயரில் வாங்கிய சொத்து விவரங்களையும் தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் தங்களது உண்மையான சொத்து மதிப்புகளை தெரிவிக்காவிட்டால் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை பாயும் என்று தலைமை செயலர் எச்சரித்துள்ளார். 

மத்திய அரசின் உத்தரவு படி ஐஏஎஸ் அதிகாரிகள் அனைவரும் உரிய படிவத்தில் தங்கள் சொத்து விவரம் குறித்த வருடாந்திர அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்பது நடைமுறை. அரசு நிர்ணயிக்கும் தேதிக்குள் தாக்கல் செய்யாவிட்டால் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை பாயும் என்பது மத்திய அரசின் எச்சரிக்கையாகும்.  ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பரம்பரை வழியாக வந்த அசையா சொத்து, தற்போது வாங்கப்படும் அசையா சொத்து, குத்தகை அல்லது அடமானத்தில் வந்துள்ள அசையா சொத்து பற்றிய விவரங்களை சொத்து விவர அறிக்கையில் தெரிவிக்க வேண்டும் என்பது கட்டாயம்.

மேலும் ஐஏஎஸ் அதிகாரிகள் பெயர்களில் இருப்பது மட்டும் அல்லாமல் அவர்களது குடும்ப உறுப்பினர்களின் சொத்து விவரத்தையும் ஆண்டுதோறும் ஜனவரி மாதம் 31-ந்தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்பது மத்திய அரசின் அறிவுறுத்தல் ஆகும். ஒரு சில அதிகாரிகள் தாக்கல் செய்யாமல் இருப்பதால் இதுபோன்ற எச்சரிக்கை விடுப்பது நடைமுறையாக இருந்து வருகிறது. இந்நிலையில் மத்திய அரசின் உத்தரவுப்படி தமிழ்நாட்டில் தற்போது பணியில் உள்ள ஐஏஎஸ் அதிகாரிகளின் சொத்து விவரங்களை சமர்ப்பிக்குமாறு தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக சுற்றறிக்கை அனுப்பி உள்ள தமிழக அரசின் தலைமைச் செயலாளர் இறையன்பு ஜனவரி 31ம் தேதிக்குள் சொத்து விவரங்களை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார்.

இது மட்டுமின்றி ஐஏஎஸ் அதிகாரிகள் தங்கள் குடும்ப உறுப்பினர்களின் அசையா சொத்து விவரங்கள் மற்றும் அதன் மூலம் வரும் வருவாய் விவரங்களையும் தாக்கல் செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அசையா சொத்துகள் மூலம் கிடைக்கப் பெறும் வருமானத்தின் தகவல்களை, IPR எனும் இணையதளம் மூலம் ஆன்லைன் வாயிலாக பதிவு செய்யும் முறை 2017ஆம் ஆண்டு மத்திய அரசு அறிமுகம் செய்து வைத்தது. இதன்மூலம் எலக்ட்ரானிக் முறையிலோ அல்லது நேரடியாக தாக்கல் செய்யப்பட்டதற்கான ஆவணங்களை ஸ்கேன் செய்தும் பதிவேற்றம் செய்யலாம் என கூறப்பட்டுள்ளது.

ஐஏஸ் அதிகாரிகள் தங்கள் பெயரில் உள்ள அல்லது தங்களது குடும்ப உறுப்பினர்கள் பெயரில் உள்ள அசையா சொத்துகளின் உண்மையான விவரங்களை தெரிவிக்காவிட்டாலோ அல்லது மறைத்தாலோ சம்பந்தப்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை பாயும் என எச்சரிக்கை விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

click me!