SLR தெரியுமா உனக்கு? ஸ்னைப்பர் துப்பாக்கி எதற்கு பயன்படுத்தணும்னு தெரியுமா? தமிழக போலீசாரை கண்டமேனிக்கு கிழிக்கும் ராணுவ வீரர்கள்!

Asianet News Tamil  
Published : May 25, 2018, 04:13 PM ISTUpdated : Sep 19, 2018, 02:25 AM IST
SLR தெரியுமா உனக்கு? ஸ்னைப்பர் துப்பாக்கி எதற்கு பயன்படுத்தணும்னு தெரியுமா? தமிழக போலீசாரை கண்டமேனிக்கு கிழிக்கும் ராணுவ வீரர்கள்!

சுருக்கம்

military man condemn tamil nadu police on sterlite issue

தூத்துக்குடியில் பொதுமக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய தமிழக காவல்துறையை கண்டமேனிக்கு காய்ச்சி எடுக்கும் காஷ்மீரிலிருந்து  ராணுவ வீரர்கள்  பேசும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

தென்கிழக்கு தமிழகத்தின் தொழில் மையங்களில் ஒன்றாகவும், மீன் உற்பத்தி மற்றும் துறைமுக நகரமாகவும் திகழும் தூத்துக்குடியில் போலீஸாரால் நடத்தப்பட்ட கொடூரமான துப்பாக்கிச் சூட்டால் 13 கொல்லப்பட்டனர்; ஐம்பதுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட இந்த படுகொலைகள் விவகாரம் செய்திகளில் பரவியதால் வேதாந்தா நிறுவனத்தின் பங்குகள் வீழ்ச்சியடைந்துள்ளன.  

தூத்துக்குடியில் இயங்கிவரும் ஸ்டெர்லைட் காப்பர் ஆலையால், புற்றுநோய் உள்ளிட்ட உயிர்க்கொல்லி நோய்களின் தாக்கம் ஏற்படுவதாலும் ஸ்டெர்லைட்க்கு எதிராகப் போராடிவருகின்றனர். இந்தப் போராட்டத்தில் 13க்கும் பேர் போலீசாரால் கொடூரமாகச் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இது தமிழகத்தில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் வாழும் தமிழர்களுக்கிடையே பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், அப்பாவி மக்களை சுட்டு வீழ்த்திய தமிழக காவல்துறையை, கழுவிக் கழுவி ஊற்றும் வாட்ஸ் ஆப் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. முதலில் எச்சரிக்க வேண்டும், பின் வானை நோக்கி சுட வேண்டும், அதன்பின் முட்டிக்காலுக்கு கீழேதான் சுட வேண்டும். அப்படி இருக்கும் போது மக்களின் தலையில், நெஞ்சில் ஏன் போலீசார் சுட்டனர். அதுவும்,  தீவிரவாதிகளை சுடுவதற்கும், என்கவுண்டர் செய்ய ஸ்னைப்பர் துப்பாக்கியை பயன்படுத்தியது தவறு என்கிற கருத்தும் எழுந்துள்ளது.


இந்நிலையில், தமிழக போலீசாரின் துப்பாக்கிச்சூட்டை கண்டித்து, காஷ்மீர் பகுதிகளில் எல்லையில் பணிபுரிந்து கொண்டிருக்கும் தமிழகத்தை சேர்ந்த பல ராணுவ வீரர்கள் கோபமாக பேசும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இந்த வீடியோவில், உங்களுக்கு யார் நெஞ்சில் சுட அனுமதி கொடுத்தது? SLR மீனிங் தெரியுமா  உனக்கு?  ஸ்னைப்பர் துப்பாக்கி எதற்கு பயன்படுத்த வேண்டும் என உங்களுக்கு தெரியுமா? அதற்கு உங்களுக்கு போதிய பயிற்சி இருக்கிறதா? முதலில் முட்டிக்கு கீழே தான் சுடனும், ஆமாம் உங்களுக்கு எங்க டிரெயினிங் இருக்கப்போகுது?  உங்களுக்கு அங்கு எல்லா வசதியும் இருக்கிறது.

இங்கே வந்து பாருங்கள். காஷ்மீரில் நாங்கள் எவ்வளவு கஷ்டப்படுகிறோம் என்று. மக்களுக்காகத்தானே நாங்கள் இங்கே இருக்கிறோம். நீங்கள் ஏன் அவர்களை கொலை செய்கிறீர்கள். உங்களை சொல்லி தவறில்லை. தமிழகத்தில் அரசாங்கம் சரியில்லை, நம்பி ஊட்டு போட்டு போட்டு இப்படி இருக்கிறார்கள் என அவர்கள் அந்த வீடியோவில் எழுச்சியுடன் பேசியுள்ளனர்.

PREV
click me!

Recommended Stories

Akshaya Tritiya 2026: அட்சய திருதியை எப்போது? தங்கம் வாங்க நல்ல நேரம் இதுதான்!
உதயநிதிக்காக களமிறங்கிய கமல்... 'அவர் ஒரு போர்வீரன்' என புகழாரம்!