ஜனவரி 17ல் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா - சோகத்தில் மூழ்கிய தொண்டர்கள்

First Published Dec 9, 2016, 6:30 AM IST
Highlights


முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 100வது பிறந்த நாள் விழாவை கொண்டாடுவதற்குள், முதல்வர் ஜெயலலிதா காலமாகிவிட்டார். இதனால், தொண்டர்கள் பெரும் சோகத்தில் உள்ளனர்.

தமிழக சினிமாவில், 25 ஆண்டுகளுக்கு மேல் நாயகனாவே நடித்து ஆதிக்கம் செலுத்திய, எம்ஜிஆர் 1917 ஜனவரி 17ம் தேதி. தீவிர அரசியலில் இருந்த அவர்,. 1972ம் ஆண்டு அதிமுக என்னும் கட்சியை தொடங்கினார்.

இதைதொடர்ந்து பல்வேறு சதிகளை கடந்து, போராட்டங்களை சந்தித்து, 1977ம் ஆண்டு தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்றார். அவர் காலமாகும் வரை தொடர்ந்து 3 முறை முதலமைச்சர் பதவியில் இருந்தார். கடந்த 1987 டிசம்பர் 24ம் தேதி, எம்ஜிஆர் காலமானார்.

 எம்ஜிஆருக்கு பின், அதிமுகவில் அடையாளம் காணப்பட்ட ஜெயலலிதா 6 முறை முதல்வராக இருந்தார். ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 17ம் தேதி எம்ஜிஆர் பிறந்தநாள், அக்டோபா 17ம் தேதி அதிமுக நிறுவன நாளை, அ.தி.மு.க.,வினர் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.

இதையொட்டி  வரும், 2017 ஜனவரி 17ம் தேதி எம்ஜிஆரின் 100வது பிறந்த நாளை தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாட அதிமுகவினர் திட்டமிட்டு இருந்தனர்.

இந்நிலையில், கடந்த 5ம் தேதி முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவால் காலமானார். இச்சம்பவம், அதிமுகவினர் இடையே பெரும் சோகத்தையும், ஆழ்நத துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இதனால், எம்ஜிஆர் நூற்றாண்டு விழா கொண்டாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என பெரும் வேதனை அடைந்துள்ளனர்.

click me!