இந்த 5 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகுது மழை!! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

By karthikeyan VFirst Published Aug 12, 2018, 2:37 PM IST
Highlights

கன்னியாகுமரி, நெல்லை, திண்டுக்கல், கோவை, நீலகிரி ஆகிய 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 

கன்னியாகுமரி, நெல்லை, திண்டுக்கல், கோவை, நீலகிரி ஆகிய 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கேரளாவில் கனமழை மீண்டும் தீவிரமாக வாய்ப்புள்ளதால் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய 5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய மேற்கு வங்க கடல் மற்றும் தெற்கு ஆந்திர கடலில் மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழகத்தில் அடுத்த சில தினங்களுக்குப் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் லேசான மழை பெய்யும். நீலகிரி, கோவை, திண்டுக்கல், திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய ஐந்து மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

தென்மேற்கு வங்கக் கடலில் மணிக்கு 55 கி.மீ முதல் 60 கி.மீ வரை பலத்த காற்று வீசும் என்பதால் அப்பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 
 

click me!