தண்ணீருக்காக கையேந்துகிறோம்.. காவிரி போராட்டத்தில் தோற்றால்..? சட்டப்பேரவையில் அமைச்சர் துரைமுருகன் உருக்கம்

Published : Mar 21, 2022, 02:51 PM ISTUpdated : Mar 21, 2022, 02:54 PM IST
தண்ணீருக்காக கையேந்துகிறோம்.. காவிரி போராட்டத்தில் தோற்றால்..? சட்டப்பேரவையில் அமைச்சர் துரைமுருகன் உருக்கம்

சுருக்கம்

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தமிழக சட்டப்பேரைவயில் இன்று தனித் தீர்மானம் கொண்டு வரப்பட்டு, நிறைவேற்றப்பட்டது.   

மேகதாது அணை:

காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது. ஆனால் இந்த அணை கட்டுவதனால், காவிரி நீரை நம்பியுள்ள டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாகும் நிலை ஏற்படும் என்று தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் கர்நாடக அரசு பட்ஜெட் தாக்கலில் போது, மேகதாது அணை கட்டுவதற்கு ரூ. 1000 கோடி நிதி ஒதுக்கியது. மேலும், மேகதாது அணை கட்டுவதற்கு அனுமதிக்க கோரி மீண்டும் மத்திய நீர்வளத்துறை அமைச்சரிடம் மீண்டும்  வலியுறுத்தப்படும் என்று அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு தமிழகம் சார்பில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கடும் கண்டனங்களை தெரிவித்திருந்தார். 

தனித் தீர்மானம்:

இந்நிலையில் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தமிழக சட்டப்பேரைவயில் இன்று தனித் தீர்மானம் கொண்டு வரப்பட்டு, நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்நிலையில், மேகதாது அணை விவகாரத்தில் தமிழக சட்டசபையில் தனித்தீர்மானத்தை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தாக்கல் செய்தார்.  தொடர்ந்து பேசிய அவர், உச்சநீதிமன்ற தீர்ப்பை மீறி அணை கட்டுவோம் என கர்நாடக அரசு தெரிவித்துள்ளதற்கு கண்டனங்களை பதிவு செய்தார். தமிழக சட்டசபையிலும், முன்னாள் முதல்வர்கள் அண்ணாதுரை, கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி என அனைவரும் மேகதாது அணைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றினர். இன்ற முதல்வர் ஸ்டாலின் அரசு தீர்மானத்தை நிறைவேற்றுகிறது.

மேகதாது அணை:

மேகதாது அணை தொடர்பாக அதிமுக தீர்மானம் கொண்டு வந்தபோதுகூட திமுக எந்த வித நிபந்தனையுமின்றி அந்த தீர்மானத்தை ஆதரித்திருக்கிறது. அதே போலே திமுக கொண்டுவந்த நேரத்தில் அதிமுகவும் ஆதரித்திருக்கிறது.மேகதாது விவகாரத்தில், கர்நாடகாவின் தேவகவுடா, எடியூரப்பா, குமாரசாமி அனைவரும் ஒரே அணியாக உள்ளனர். அண்டை மாநிலங்களுடன் நல்லுறவை காக்க வேண்டும். ஆனால், அதே நேரத்தில் உரிமையை விட்டு கொடுக்கக்கூடாது. மத்தியில் யார் ஆட்சிக்கு வந்தாலும், தமிழகத்தை மாற்றாந்தாய் பிள்ளை போல் நடத்துகிறார்கள். தண்ணீருக்காக ஒரு பக்கம் கேரளாவுடனும், மறுபக்கம் கர்நாடகாவுடன் கையேந்தும் நிலையில் உள்ளது.நம்முடைய மகன், பேரன் வரை காவிரி போராட்டம் முடியாதோ என்ற சந்தேகம் எழுகிறது. காவிரி விவகாரத்தில் தோற்றோம் என்றால் வருங்கால தலைமுறையினர் நம்மை சபிக்கும்

தண்ணீருக்காக கையேந்தும் நிலை:

காவிரி பிரச்னை இரு மாநிலங்களுக்கு இடையிலான உணர்வுப்பூர்வமான பிரச்னை. காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றம் கடந்த 2018 பிப்., 16 அன்று அளித்த தீர்ப்பை மதிக்காமல் சம்பந்தப்பட்ட மாநில அனுமதியையும், மத்திய அரசு அனுமதியையும் பெறாமல் அணை கட்டும் முயற்சியை மேற்கொண்டு வரும் கர்நாடக அரசிற்கு தமிழக சட்டசபையின் கண்டனத்தை தெரிவித்து கொள்கிறோம். இந்த விவகாரத்தில், கர்நாடக அரசுக்கு எந்தவித தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் அனுமதியையும் தரக்கூடாது என மத்திய அரசை கேட்டு கொள்வதாக அவர் கூறினார்.பின்னர், அனைத்துக் கட்சியினரின் ஆதாரவையும் அடுத்து மேகதாது அணைக்கு எதிரான தீர்மானம் சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

மேலும் படிக்க: விடாது துரத்தும் கர்நாடகா.. மேகதாது அணை விவகாரம்.. மீண்டும் மத்திய அமைச்சரை சந்திக்க முடிவு..

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

அரசு பள்ளி மாணவர்களுக்கு தரமற்ற இலவச சைக்கிள்.. அண்ணாமலையின் பகீர் குற்றச்சாட்டு!
தமிழகத்தில் இருந்து சபரிமலை ஐயப்ப பக்தர்களுக்கு லாரி லாரியாக சென்ற பிஸ்கெட்! மாஸ் காட்டும் அறநிலையத்துறை!