தருமபுர ஆதீன பட்டணப் பிரவேசம் தடை நீக்கம்... உத்தரவிட்டார் மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர்!!

Published : May 08, 2022, 04:50 PM IST
தருமபுர ஆதீன பட்டணப் பிரவேசம் தடை நீக்கம்... உத்தரவிட்டார் மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர்!!

சுருக்கம்

தருமபுரம் ஆதீன பட்டணப் பிரவேச நிகழ்ச்சிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி மயிலாடுதுறை கோட்டாட்சியர் உத்தரவிட்டுள்ளார். 

தருமபுரம் ஆதீன பட்டணப் பிரவேச நிகழ்ச்சிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி மயிலாடுதுறை கோட்டாட்சியர் உத்தரவிட்டுள்ளார். இதை அடுத்து வரும் 22 ஆம் தேதி பட்டணப் பிரவேச நிகழ்வு நடைபெற உள்ளது. மயிலாடுதுறையில் தருமபுரம் ஆதீனத்தின் 27 ஆவது ஆதீனகர்த்தராக பதவியேற்ற ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் வெள்ளிப் பல்லக்கில் அமரந்து வீதி உலா வந்தார். அந்த பல்லக்கை ஆதீனத்தில் உள்ள அடிதட்டு மக்கள் சுமந்து வந்தனர். இந்த நிகழ்வை தொடர்ந்து டிசம்பர் 24 ஆம் தேதி தருமை ஆதீனத்திற்கு சொந்தமான வைத்தீஸ்வரன்கோயில் வைத்தியநாதசுவாமி கோயிலுக்கு சென்றவரை, அங்கும் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டு, வெள்ளி பல்லக்கில் அமரசெய்து பட்டினப் பிரவேசம் செய்யவைத்தனர். அதே போலவே காரைக்கால் திருநள்ளார் சனிபகவான் கோயிலிலும் நடைபெற்றது. இதற்கு திராவிடர் கழகம் எதிர்ப்பு தெரிவித்தது.

இந்த நிலையில் தருமபுரம் ஆதீனம் குருமகாசன்னிதானத்தை பல்லக்கில் அமர வைத்து தூக்கி செல்வதற்கு தடை விதித்து மயிலாடுதுறை கோட்டாட்சியர் உத்தரவிட்டுள்ளார். இதற்கு பாஜக, பாமக மற்றும் அதிமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தன. மேலும் பட்டினப் பிரவேசத்தை கண்டிப்பாக நடத்துவோம் என்று மதுரை ஆதீனம் உள்ளிட்ட மத குருமார்களும், பாஜக தலைவர் அண்ணாமலை, எச்.ராஜா உள்ளிட்டோரும் தெரிவித்தனர். இந்த விஷயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சுமுகமான முடிவு எடுப்பார் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

இந்த நிலையில் தருமபுரம் ஆதீனம் இன்று மயிலாடுதுறையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பட்டின பிரவேசம் நடத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாய்மொழியாக அனுமதி வழங்கியிருப்பதாக கூறினார். பாரம்பரிய நடைமுறைக்கு தமிழக முதல்வர் அனுமதி அளித்துள்ளார். விருப்பப்பட்டுதான் தொண்டர்கள் ஆதீனத்தை சுமக்கின்றனர் என்றும் ஆதீனம் குறிப்பிட்டார். இந்த நிலையில், தருமபுரம் ஆதீன பட்டணப் பிரவேசத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி மயிலாடுதுறை கோட்டாட்சியர் உத்தரவிட்டுள்ளார். தருமபுரம் ஆதீனத்தை பல்லக்கில் தூக்கிச் செல்லும் நிகழ்வுக்கு விதித்த தடை விலக்கிக் கொள்ளப்படுகிறது என்றும் அவர் தெரிவித்தார். தடை நீக்கப்பட்டதை தொடர்ந்து வரும் 22 ஆம் தேதி பட்டணப் பிரவேச நிகழ்வு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

PREV
click me!

Recommended Stories

Tamil Nadu Rain Alert: தமிழகத்தில் தெறிக்க விடப்போகும் கன‌மழை! எந்தெந்த மாவட்டங்களில்?
CM Vijay Says No Entry: அப்போ "அல்வா"தானா.! அதிமுக முன்னாள் அமைச்சர்களுக்கு "நோ என்ட்ரி"?