ரேஷன் கடை பெண் பணியாளர்களுக்கு குட்நியூஸ்.. தமிழக அரசு வெளியிட்ட அட்டகாசமான அறிவிப்பு.!

Published : Sep 10, 2022, 09:59 AM ISTUpdated : Sep 10, 2022, 10:00 AM IST
ரேஷன் கடை பெண் பணியாளர்களுக்கு குட்நியூஸ்.. தமிழக அரசு வெளியிட்ட அட்டகாசமான அறிவிப்பு.!

சுருக்கம்

அரசு பெண் ஊழியர்களுக்கு 12 மாதங்கள் மகப்பேறு விடுப்பு வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால், ரேஷன் கடை பெண் ஊழியர்களுக்கு 6 மாதம் மட்டுமே விடுப்பு வழங்கப்படுவதாக புகார் எழுந்தது. 

ரேஷன் கடையில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு 270 முதல் 365 நாட்கள் வரை மகப்பேறு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு பணியாளர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் ரேஷன் கடை ஊழியர்களுக்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அரசு பெண் ஊழியர்களுக்கு 12 மாதங்கள் மகப்பேறு விடுப்பு வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால், ரேஷன் கடை பெண் ஊழியர்களுக்கு 6 மாதம் மட்டுமே விடுப்பு வழங்கப்படுவதாக புகார் எழுந்தது. இது தொடர்பான செய்திகள் வெளியான நிலையில் ரேஷன் கடைகளில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கும் 270 நாட்கள் மகப்பேறு விடுப்பு பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க;- பொதுமக்களுக்கு குட்நியூஸ்.. இனி ரேஷன் கடையிலும் சிலிண்டர் வாங்கலாம்..!

இதுகுறித்து கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர், மண்டல இணை பதிவாளர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்;- அனைத்து கூட்டுறவு சங்கங்களின் கட்டுப்பாட்டில் உள்ள ரேஷன் கடைகளில் பணிபுரியும் பெண் விற்பனையாளர்கள், எடையாளர்களுக்கு 12 மாதங்கள் மகப்பேறு விடுப்பு வழங்க, தேவையான துணை விதி திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். தகுதியுள்ள அனைத்து பெண் ஊழியர்களுக்கும், மகப்பேறு விடுப்பு அனுமதிக்கப்படுவதை தங்கள் அளவில் கண்காணித்து உறுதி செய்ய வேண்டும். 

அரசு ஊழியர்களுக்கு, அரசால் அவ்வப்போது அறிவிக்கப்படும் சலுகைகள், ரேஷன் கடை ஊழியர்களுக்கும் பொருந்தும் என, ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு ஊழியர்களுக்கு, அரசால் அறிவிக்கப்படும் சலுகைகள் தொடர்பாக, உடனுக்குடன் சங்க துணை விதிகளில் உரிய திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, சம்பந்தப்பட்ட ஊழியர்களுக்கு அச்சலுகைகள் கிடைக்க உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க;-  குடும்ப அட்டைதாரர்களுக்கு அதிர்ச்சி செய்தி..! ரேஷனில் இனி இலவச பொருட்கள் கிடையாது

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Govt Scheme: தொழில் தொடங்க ரூ.30 லட்சம் கடன் பெறலாம் ஈசியா.! தகுதிகள் மற்றும் விண்ணப்ப விவரங்கள் இதோ
Raghava Lawrence: திருச்சி கிழக்கில் தவெக சார்பில் போட்டியா? ஒருவழியாக சஸ்பென்ஸ் உடைத்த ராகவா லாரன்ஸ்