
கன்னியாகுமரி
கன்னியாகுமரியை பேரிடர் மாவட்டமாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கன்னியாகுமரியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கன்னியாகுமரி மாவட்டம், குழித்துறையில் உள்ள விளவங்கோடு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மார்த்தாண்டம் வட்டாரக் குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வட்டாரக் குழு உறுப்பினர் இ. பத்மநாபபிள்ளை தலைமைத் தாங்கினார். வட்டாரச் செயலர் வீ. அனந்தசேகர் போராட்டத்தை தொடங்கி வைத்துப் பேசினார். குழித்துறை நகர்மன்ற முன்னாள் துணைத் தலைவர் மோசஸ் சுதீர் போராட்டத்தை விளக்கிப் பேசினார்.
இதில் வட்டாரக் குழு உறுப்பினர் மதன் மோகன்லால், கட்சி நிர்வாகிகள் ரவி, ராதாகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த் ஆர்ப்பாட்டத்தில் "புயல் நிவாரணப் பணியை துரிதப்படுத்த வேண்டும்.
பயிர்கள், வீடுகள் மற்றும் உயிர் சேதத்துக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.
புயலால் சேதமடைந்த ரப்பர் மரம் ஒன்றிற்கு ரூ. 2000, செவ்வாழைக்கு ரூ. 500, நேந்திரன் வாழைக்கு ரூ. 300 நிவாரணம் வழங்க வேண்டும்
கன்னியாகுமரியை பேரிடர் மாவட்டமாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும்" உள்ளிட்ட கோரிக்கைகள்ள வலியுறுத்தப்பட்டன.