அடிப்படை வசதிகள் கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் நடைப்பயணம்...

First Published Jun 18, 2018, 12:36 PM IST
Highlights
Marxist Communist Party of India campaign journey asking basic amenities


திருவள்ளூர்

திருவள்ளூரில் அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என்று வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் இரண்டு நாள் நடைப்பயணப் பிரச்சாரத்தை தொடங்கி உள்ளனர்.  

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி, பள்ளிப்பட்டு தாலுக்காவில் உள்ள ஆர்.கே.பேட்டை ஒன்றியத்தில் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என்று வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கட்சியினர் இரண்டு நாள் நடைப்பயணம் பிரச்சாரத்தை மேற்கொண்டனர்.

இந்த பிரச்சாரம் நேற்று தொடங்கியது. வெடியங்காடு கிராமத்தில் தொடங்கிய இந்த பிரச்சாரத்திற்கு கட்சியின் மாவட்டச் செயலாளர் பெருமாள் தலைமை வகித்தார். கணேசன் வரவேற்றார்.

இதில், மாநிலக் குழு உறுப்பினர் சுந்தர்ராஜன் பங்கேற்று பிரச்சாரப் பயணத்தை தொடங்கி வைத்தார். இதில், 50-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் பயணத்தை மேற்கொண்டனர். 

இதில், "பள்ளிப்பட்டு வட்டத்திலிருந்து ஆர்.கே.பேட்டையை  மாற்றி,  தனி வட்டமாக அறிவிக்க வேண்டும்.  

குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க கூட்டுக் குடிநீர் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.

100 நாள் வேலை திட்டத்தின் மூலம் ஏரி, குளங்களை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும். 

ஆர்.கே.பேட்டையில் பேருந்து நிலையம் அமைக்க வேண்டும்" உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர். 


 

click me!