நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களை தாக்கிய கடல் கொள்ளையர்கள்; ரூ.1 இலட்சம் மதிப்பிலான பொருட்கள் கொள்ளை...

 
Published : Apr 06, 2018, 10:10 AM ISTUpdated : Sep 19, 2018, 02:12 AM IST
நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களை தாக்கிய கடல் கொள்ளையர்கள்; ரூ.1 இலட்சம் மதிப்பிலான பொருட்கள் கொள்ளை...

சுருக்கம்

Marine burglars attacked fishermen while fishing in sea Rs.1 lakh worth of goods theft

நாகப்பட்டினம்

நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகூர் மீனவர்களை தாக்கி அவர்கள் வைத்திருந்த ரூ.1 இலட்சம் மதிப்பிலான மீன்கள், பொருட்களை கடல் கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றவிட்டனர். 

கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த நாகூர் மீனவர்களை தாக்கி ரூ.1 லட்சம் மதிப்பிலான மீன்கள்-பொருட்களை கடல் கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

நாகப்பட்டினம் மாவட்டம், நாகூரை அடுத்த சம்பா தோட்டம் மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர் மாரியப்பன் (58). மீனவரான இவருக்கு சொந்தமான பைபர் படகில் அவருடைய மகன் ரமேஷ (32), அதேபகுதியை சேர்ந்த லட்சுமணன் (45), செல்வமணி (50), குப்புசாமி (50), இடும்பன் (45) ஆகிய ஐவரும் நேற்று முன்தினம் மாலை நாகூர் பட்டினச்சேரியில் இருந்து மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். 

இவர்கள் நாகூர் பட்டினச்சேரியில் இருந்து சுமார் 32 நாட்டிக்கல் கடல் மைல் தொலைவில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு படகில் வந்த கடல் கொள்ளையர்கள் ஐவர், நாகூர் மீனவர்களின் பைபர் படகை சுற்றி வளைத்து இரும்பு பைப், கம்பிகளால் மீனவர்களை தாக்கினர். 

பின்னர், மீனவர்களின் மீன்பிடி வலைகள், ஜி.பி.எஸ். கருவி, மீன்கள், ஐஸ் பெட்டி உள்ளிட்ட சுமார் ரூ.1 இலட்சம் மதிப்பிலான பொருட்களை கொள்ளையடித்து சென்றுவிட்டனர்.

கடல் கொள்ளையர்கள் தாக்கியதில் காயமடைந்த நாகூர் மீனவர்கள் ஐவரும் நேற்று முன்தினம் நள்ளிரவு சுமார் 11.30 மணியளவில் கரை திரும்பினர். உடனே பஞ்சாயத்தார்கள் மீனவர்களை மீட்டு நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டு இருந்த நாகூர் மீனவர்களை தாக்கி அவர்கள் வைத்து இருந்த ரூ.1 இலட்சம் மதிப்பிலான மீன்கள், பொருட்களை கடல் கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவத்தால் அந்தப் பகுதி மக்கள் அச்சமடைந்து உள்ளனர்.  
 

PREV
click me!

Recommended Stories

நாகூர் ஹனீபாவும், கலைஞரும் நகமும், சதையுமாக இருந்தனர்.. முதல்வர் ஸ்டாலின் உணர்ச்சி பேச்சு
திட்டக்குடி அருகே அரசு பேருந்து டயர் வெடித்து கோர விபத்து! 7 பேர் உடல் நசுங்கி பலி!