
தேனி
இறைச்சிக்காக மாடுகள் விற்பதை தடை செய்த மத்திய அரசை கண்டித்து தேனியில் பல்வேறு கட்சிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தேனி மாவட்டம், கம்பம் ஏ.கே.ஜி. திடலில் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம், மத்திய அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் அப்பாஸ்மந்திரி தலைமை வகித்தார். மாநில அமைப்பு செயலாளர் முகமதுகவுஸ் கண்டன உரையாற்றினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், “இறைச்சிக்காக மாடுகள் விற்பதை தடை செய்த மத்திய அரசை கண்டிப்பது, தடை சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்துவது என்று முழக்கங்களும் எழுப்பப்பட்டன.
இதில் த.மு.மு.க., விடுதலை சிறுத்தைகள் மற்றும் மார்க்சிஸ் கம்யூனிஸ்டு நிர்வாகிகள் என ஏராளமானோர் பங்கேற்று மத்திய அரசின் இந்த தடைச் சட்டத்திற்கு எதிராக குரல் கொடுத்தனர்.