
தூத்துக்குடி
தூத்துக்குடியில் நடைப்பெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்திற்கு போலி ரூபாய் நோட்டுகளை சட்டையில் ஒட்டிக் கொண்டு வந்தவர்களால் ஆட்சியரகமே பரபரப்பானது.
தூத்துக்குடி மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் வெங்கடேஷ் தலைமைத் தாங்கினார்.
இந்தக் கூட்டத்தில் ஏராளமான மக்கள் பங்கேற்று தங்களது கோரிக்கைகளை மனுக்களாக கொடுத்தனர்.
தூத்துக்குடி தெய்வச்செயல்புரத்தைச் சேர்ந்த பரமசிவன் மற்றும் சிலர் ஆட்சியர் அலுவலகத்திற்கு நூதன முறையில் மனு கொடுக்க வந்தனர்.
பரமசிவன் போலி ரூபாய் நோட்டுகளை தனது சட்டையில் ஒட்டிக் கொண்டு ஆட்சியரகத்தில் உள்ளே நுழைந்ததைப் பார்த்த காவலாளர்காள் அவர்களை உள்ளேச் செல்ல அனுமதிக்கவில்லை.
திடீரென பரமசிவன் மற்றும் அவருடன் வந்த மற்றொருவர் தனது சட்டையை கழிற்றிவிட்டு, காவலாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் காவலாளர்கள் அவர்களை சிப்காட் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர்.
அப்போது, “”கோரம்பள்ளத்தில் உள்ள குளத்தை தூர்வார கோரி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. குளத்தை தூர்வாரக்கோரி பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால்தான் குழந்தைகள் விளையாடும் போலி ரூபாய் நோட்டுகளை சட்டையில் ஒட்டி மனு கொடுக்க வந்தோம்” என்று அவர்கள் தெரிவித்தனர்.