காய்கறி வியாபாரியிடம் கத்தியைக் காட்டி மிரட்டி சாராயம் குடிக்க பணம் கேட்டவர் கைது…

Asianet News Tamil  
Published : Oct 19, 2017, 07:53 AM ISTUpdated : Sep 19, 2018, 01:19 AM IST
காய்கறி வியாபாரியிடம் கத்தியைக் காட்டி மிரட்டி சாராயம் குடிக்க பணம் கேட்டவர் கைது…

சுருக்கம்

man arrested for threatning a vegetable seller with knife

தேனி

தேனியில், காய்கறி வியாபாரியிடம் கத்தியைக் காட்டி மிரட்டி சாராயம் குடிக்க பணம் கேட்டவரை காவலாளர்கள் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கேரள மாநிலம், மூணாறு அருகேயுள்ள எல்லப்பட்டி எஸ்டேட், கே.கே.டிவிசன் என்ற கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணன் மகன் சுரேஷ்பாபு (40). இவர் காய்கறி வியாபாரி.

இவர் நேற்று தேனி மாவட்டம், போடி கட்டபொம்மன் சிலை அருகே நின்றிக் கொண்டிருந்தபோது அவரிடம் மர்ம நபர் ஒருவர் கத்தியைக் காட்டி மிரட்டி சாராயம் குடிக்க பணம் கேட்டுள்ளார். பயந்துபோய் பணத்தைக் கொடுத்துவிட்டாராம் சுரேஷ்பாபு.

பின்னர், இதுகுறித்து போடி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் சுரேஷ்பாபு. அதன்பேரில் வழக்குப் பதிந்து காவலாளர்கள் விசாரணை மேற்கொண்டனர்.

அந்த விசாரணையில், திருநெல்வேலி மாவட்டம், மானூர், சுந்தரலிங்கம் நகரைச் சேர்ந்த தங்கப்பன் மகன் நாராயணன் (25) என்பவர்தான் சுரேஷ்பாபுவிடம் கத்தியைக் காட்டி மிரட்டி சாராயம் குடிக்க பணம் கேட்டுள்ளார் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

பின்னர், சார்பு - ஆய்வாளர் ராஜலிங்கம் மற்றும் காவலாளர்கள் வழக்குப் பதிந்து நாராயணனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

PREV
click me!

Recommended Stories

Tamil Nadu Weather Update: தமிழகத்தில் வெளுத்து வாங்கப் போகும் மழை! சென்னையில் எப்படி? வானிலை அப்டேட்!
TASMAC: விஜய் ஆட்சியில் டாஸ்மாக்கில் அடுத்த அதிரடி.. இனி இரவு 10 மணிக்கு மேல் போட்டோ அனுப்பணும்!