பரபரப்பு: மணல் குவாரியை மூடக்கோரி உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி விவசாயி தீக்குளிக்க முயற்சி…

 
Published : Nov 01, 2017, 07:51 AM ISTUpdated : Sep 19, 2018, 01:22 AM IST
பரபரப்பு: மணல் குவாரியை மூடக்கோரி உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி விவசாயி தீக்குளிக்க முயற்சி…

சுருக்கம்

Making the quarry mushroomery kerosene in the body and trying to fire the farmer ...

விழுப்புரம்

விழுப்புரத்தில் மணல் குவாரியை மூட வேண்டும் என்று மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டபோது திடிரென விவசாயி ஒருவர் தனது உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயற்சித்தால் பரபரப்பு ஏற்பட்டது.

விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் அருகே வடக்குநெமிலி ஊராட்சி எல்லைக்கு உட்பட்ட தென்பெண்ணை ஆற்றில் அரசு மணல் குவாரி ஒன்று இயங்கி வருகிறது.

இந்த மணல் குவாரியில் நேற்று வழக்கம்போல லாரியில் மணல் ஏற்றும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் சிலர், திடீரென மணல் குவாரியை மூடுங்கள் என்று அங்கிருந்தவர்களிடம் வாக்குவாதம் செய்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த திருக்கோவிலூர் துணை காவல் கண்காணிப்பாளர் அசோக்குமார், ஆய்வாளர் ரத்தினசபாபதி, உதவி ஆய்வாளர் அன்பழகன் மற்றும் காவலாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

இந்த நிலையில் விவசாயி ஒருவர் மண்ணெண்ணெய் கேனுடன் அங்கு வந்து, தனது உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தீக்குளிக்கும் முயற்சியில் ஈடுபட்டார். இதனைப் பார்த்த காவலாளர்கள் அவரிடமிருந்து மண்ணெண்ணெய் கேனை பறித்தனர்.

அதனைத் தொடர்ந்து, மணல் குவாரியை மூடக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் காவலாளர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

“இப்பிரச்சனை சம்பந்தமாக ஆட்சியரிடம் மனு கொடுத்து பேசி முடிவு எடுக்கலாம்” என்று காவலாளர்கள் சமாதானப்படுத்தினர்.

அதைனையேற்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து அமைதியாக கலைந்து சென்றனர்.

 

PREV
click me!

Recommended Stories

ஆட்டம் ஆரம்பம்..! நேற்று ராஜாஜி... இன்று சுப்பிரமணிய பாரதி.. தமிழர்களுக்கு மோடி மரியாதை
திமுகவை வீழ்த்த நினைப்பவர்கள் காணாமல் போய்விடுவார்கள்..! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கொக்கரிப்பு