சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற முதியவரை அடித்து உதைத்து போலீசில் பிடித்துக் கொடுத்த மக்கள்...

 
Published : Nov 01, 2017, 07:40 AM ISTUpdated : Sep 19, 2018, 01:22 AM IST
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற முதியவரை அடித்து உதைத்து போலீசில் பிடித்துக் கொடுத்த மக்கள்...

சுருக்கம்

Kick the old man who tried to sexually abuse the girl ...

வேலூர்

ஆம்பூரில் மாற்றுத் திறனாளி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற முதியவரை மக்கள் அடித்து உதைத்தனர். அவர்மீது வழக்குப் பதிந்து காவலாளர்கள் கைது செய்தனர்.

வேலூர் மாவட்டம், ஆம்பூர் அருகே உள்ள சோமலாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பழனி (58).  இவரது வீட்டிற்கு அருகே மாற்றுத் திறனாளியான 6 வயது சிறுமி விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அந்த சிறுமிக்கு பிஸ்கட் தருவதாகக் கூறி மறைவான இடத்துக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார்.

இதனைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் பழனியை சரமாரியாக அடித்து உதைத்து அவரிடம் இருந்து சிறுமியை மீட்டனர். மேலும், அவரை ஆம்பூர் கிராமிய காவல் நிலையத்திலும் ஒப்படைத்தனர்.

இதுகுறித்த அளித்த புகாரின் பேரில் ஆம்பூர் அனைத்து மகளிர் காவலாளர்கள் பழனி மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர்.

மேலும், மக்கள் அடித்து உதைத்ததில் பலத்த காயமடைந்த பழனிக்கு ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது..

PREV
click me!

Recommended Stories

ஆட்டம் ஆரம்பம்..! நேற்று ராஜாஜி... இன்று சுப்பிரமணிய பாரதி.. தமிழர்களுக்கு மோடி மரியாதை
திமுகவை வீழ்த்த நினைப்பவர்கள் காணாமல் போய்விடுவார்கள்..! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கொக்கரிப்பு