ரேஷன் கடைகளில் முன்னுரிமை, அந்தியோதயா ரேசன் கார்டுகளில் குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவரின் விரல் ரேகையையும் பதிவு செய்து, ஆதார் மூலம் உறுதி செய்ய சம்பந்தப்பட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
அந்தியோதயா ரேஷன் கார்டு வைத்திருக்கும் பயனாளிகள் குறித்து ரேஷன் கடை ஊழியர்களுக்கு மத்திய அரசு தரப்பில் முக்கிய உத்தரவு ஒன்று போடப்பட்டிருக்கிறது.
அந்தியோதயா ரேஷன் கார்டு மத்திய அரசு சார்பில் ரேஷன் பயனாளிகளுக்கு வழங்கப்படும் அடையாள அட்டை ஆகும். இது வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த இந்த ரேஷன் கார்டு வைத்திருக்கும் குடும்பங்களுக்கு அந்த்யோதயா அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் மாதம் தோறும் 35 கிலோ உணவு தானியங்கள் வழங்கப்படுகின்றன.
தமிழக ரேஷன் கடைகளிலும் முன்னுரிமையுள்ள, முன்னுரிமையற்ற குடும்ப அட்டைதாரர்களுக்கு குடும்ப உறுப்பினர் எண்ணிக்கை அடிப்படையில் நபருக்கு 5 கிலோ வீதம் அரிசி வழங்கப்படுகிறது. மொத்தம் 18.61 லட்சம் அந்தியோதயா ரேஷன் கார்டுகளும், 95.66 லட்சம் முன்னுரிமை கார்டுகளும் உள்ளன.
இதனால், மத்திய மாநில அரசுகள் வழங்கும் அரிசிக்கு தனித்தனியாக ரசீது பதிவு செய்யப்படுவது வழக்கமாக உள்ளது. அந்தியோதயா கார்டுகளில் 65.47 லட்சம் பேரும், முன்னுரிமை கார்டுகளில், 2.99 கோடி பேரும் குடும்ப உறுப்பினர்களாக உள்ளனர். இந்த எண்ணிக்கையை சரிபார்க்கும் நடவடிக்கையை மத்திய அரசு தொடங்கியுள்ளது.
ரூ.25,000 போதும்! போஸ்ட் ஆபிஸ் திட்டத்தில் முதலீடு செய்தால் 18 லட்சம் கிடைக்கும்!
ரேஷன் கடைகளில் முன்னுரிமை, அந்தியோதயா ரேசன் கார்டுகளில் குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவரின் விரல் ரேகையையும் பதிவு செய்து, ஆதார் மூலம் உறுதி செய்ய சம்பந்தப்பட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
இதுவரை 66 சதவீதம் பேரின் விவரங்கள் சரிபார்க்கப்பட்டுள்ளன. மீதியுள்ள பயனாளிகளின் விரல் ரேகை பதிவுகளைப் பெறும் பணியை பிப்ரவரி 29ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்று உணவுத்துறை கெடு விதிக்கப்பட்டுள்ளதாம். ரேஷன் ஊழியர்கள் வீடு வீடாகச் சென்று கைரேகையை பதிவு செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இது தொடர்பாக ரேஷன் ஊழியர்களுடன் நடந்த சிறப்பு கூட்டத்தில் முக்கிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. ரேஷன் கார்டுதாரர்களின் வீட்டுக்கு விரல் ரேகை கருவியுடன் சென்று பதிவு செய்ய வேண்டும் என்றும் அவர்களை ரேஷன் கடைக்கு வரவழைத்து காக்க வைக்கக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாத்தி மாத்தி 20 போன்களை பயன்படுத்தும் சுந்தர் பிச்சை! கூகுள் சி.இ.ஓ. சொல்லும் காரணம் என்ன தெரியுமா?