இலங்கை மீனவர்கள் ஓகே சொன்னால்தான் படகுகளை விடுவிக்க முடியும்… ஸ்ரீலங்கா அமைச்சரின் திமிர் பேச்சு…

Asianet News Tamil  
Published : Apr 30, 2017, 09:24 AM ISTUpdated : Sep 19, 2018, 03:13 AM IST
இலங்கை மீனவர்கள் ஓகே சொன்னால்தான் படகுகளை விடுவிக்க முடியும்… ஸ்ரீலங்கா அமைச்சரின் திமிர் பேச்சு…

சுருக்கம்

Mahendra Amaraveera

இலங்கை மீனவர்கள் ஓகே சொன்னால்தான் படகுகளை விடுவிக்க முடியும்… ஸ்ரீலங்கா அமைச்சரின் திமிர் பேச்சு…

இலங்கை மீனவர்கள் ஒப்புக்கொண்டால் மட்டுமே தமிழக மீனவர்களின் படகுகளை விடுவிக்க முடியும்  என இந்நாட்டு மீன்வளத்துறை மகேந்திர அமரவீரா தெரிவித்துள்ளார்.

தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லும்போது இலங்கை கடற்படையினர் அவர்களை தாக்குவதும், சிறைப்பிடிப்பதும், படகுகளை பறிமுதல் செய்வதும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

இது குறித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பிதரமருக்கு பல முறை தமிழக முதலமைச்சர் கடிதம் எழுதியிருந்தும் இது வரை மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

தமிழக மீனவர்களின் 140 படகுகளை இலங்கை அரசு சிறைப்பிடித்து வைத்திருப்பதால், தங்களது, வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும், உடனடியாக அந்த படகுகளை மீட்டுத் தரவேண்டும் என்றும் மீனவர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

இந்நிலையில் சிறைபிடிக்கப்பட்ட படகுகளை விடுப்பது குறித்து அரசு எந்த முடிவும் எடுக்கவில்லை என்றும்  இலங்கை மீனவர்கள் ஒப்புக்கொண்டால் சில படகுகளை விடுவிப்பது பற்றி முடிவெடுக்கலாம் என்றும்  மீன்வளத்துறை அமைச்சர் மகேந்திர அமரவீரா தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி இலங்கை வரும் போது அதுபற்றி பேச்சு நடத்த திட்டமில்லை என்றும் அவர் தெளிவுப்படுத்தி உள்ளார். 

இலங்கை அமைச்சரின் இந்த கருத்து தமிழக மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையால் சிறைப்பிடிக்கப்பட்ட 140 படகுகளில் பல படகுகள் மோசமாக சேதமடைந்துள்ளதாகவும்,  அந்த படகுகளுக்கு இலங்கை அரசிடம்  இருந்து இழப்பீடு பெற்றுத்தர வேண்டும் என்பது மீனவர்களின் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

 

PREV
click me!

Recommended Stories

மாற்றுத்திறனாளி சிறுமியை பார்த்ததும் விஜய் செய்த செயல்.... எப்படி இருக்கீங்கமா.. நான் தான் விஜய்….
மெரினா பீச்சில் கடலுக்கு அருகில் செல்ல முடியாதா? காரணம் இதுதான்!