பணியில் இருந்தபோதே மயங்கி விழுந்து உயிரிழந்த பெண் காவலர்..வழக்கு பதிவு செய்து விசாரணை..

Published : Jan 23, 2022, 08:52 PM ISTUpdated : Jan 23, 2022, 09:09 PM IST
பணியில் இருந்தபோதே மயங்கி விழுந்து உயிரிழந்த பெண் காவலர்..வழக்கு பதிவு செய்து விசாரணை..

சுருக்கம்

மதுரை மாநகரில் காவல் நிலையத்தில் பணியில் இருந்த பெண் காவலர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாநகரில் காவல் நிலையத்தில் பணியில் இருந்த பெண் காவலர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.மதுரை மாநகர் எஸ்.எஸ்.காலனி காவல் நிலையத்தில் எழுத்தராக பணியாற்றி வந்த கலாவதி என்ற முதல்நிலை பெண் காவலர், பணியில் இருந்த போது உடல் நலக் குறைவு காரணமாக மயங்கி கீழே விழுந்துள்ளார்.இதையடுத்து அவரை மீட்ட சக காவல் துறையினர் முதலுதவி சிகிச்சை அளித்த பின்னர், மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்நிலையில் பெண் காவலர் கலாவதியை பரிசோதித்த அரசு மருத்துவர் ஏற்கெனவே கலாவதி உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து உயிரிழந்த பெண் காவலரின் உடல் பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. பணியின் போது மயங்கி விழுந்து உயிரிழந்த பெண் காவலர் இறப்பு தொடர்பாக எஸ்.எஸ் காலனி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.இதையடுத்து மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட காவலர் கலாவதி சடலத்திற்கு மதுரை மாநகர காவல் ஆணையர், துணை ஆணையர்கள் மற்றும் காவல் துறையினர் இறுதி மரியாதை செலுத்தினர்.பின்னர் மதுரை மாவட்டம் பாலமேடு அடுத்துள்ள வளையப்பட்டிp கிராமத்திற்கு கலாவதியின் உடலை நல்லடக்கம் செய்ய உறவினர்களால் எடுத்துச் செல்லப்பட்டது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

நாளை தவெக வில் சேருகிறார் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம்..! டெல்டாவை தட்டி தூக்க பக்கா ஸ்கெட்ச்
ஜி.கே.மணி மனுசனே இல்ல.. அப்பாவையும், என்னையும் பிரிச்சிட்டாரு.. போட்டுத் தாக்கிய அன்புமணி!