சீமை கருவேல மரங்களை வெட்ட தடை இல்லை - உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

 
Published : Jul 28, 2017, 03:30 PM ISTUpdated : Sep 19, 2018, 12:56 AM IST
சீமை கருவேல மரங்களை வெட்ட தடை இல்லை - உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

சுருக்கம்

madras HC removes ban for seema karuvala trees

சீமை கருவேல மரங்களை வெட்டுவதற்கான தடையை நீக்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சீமை கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் உள்ளிட்ட பலர் வழக்கு தொடர்ந்திருந்தனர். அதன்படி சீமை கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என மதுரை உயர்நீதிமன்றம் அனைத்து மாவட்ட ஆட்சியாளர்களுக்கும் உத்தரவிட்டது.

ஆனால் சீமை கருவேல மரங்களை வெட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வி.மேகநாதன் என்ற வழக்கறிஞர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அவர் அளித்த மனுவில், கருவேலம் மரம் வளர்வதால், சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது என்பது அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை. இந்த மரம், வணிக ரீதியாக பயன்படுத்தப்படுகிறது என தெரிவித்திருந்தார்.

இதைதொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றம் ஒரு நிபுணர் குழுவை அமைத்து ஆய்வு செய்ய உத்தரவிட்டு கடந்த ஏப்ரல் மாதம் சீமை கருவேல மரங்களை வெட்ட தடை விதித்திருந்தது.

இந்நிலையில், நிபுணர் குழு அறிக்கையின் அடிப்படையில் தடையை நீக்கி உத்தரவிட்டுள்ளது உயர்நீதிமன்றம்.

மேலும் இந்த வழக்கை அக்டோபர் 13 ஆம் தேதிக்கு ஒத்துவைத்து உத்தரவிட்டுள்ளது. 

PREV
click me!

Recommended Stories

சிதறி கிடந்த பூ.. கர்சீப்.. தாயின் கதையை முடித்துவிட்டு ஓவர் ஆக்டிங்கால் வசமாக சிக்கிய மகள், மருமகள்.. நடந்தது என்ன?
திமுக எம்.எல்.ஏ கார் மோதி ஒருவர் பலி..! ஒரத்தநாட்டில் பரபரப்பு..! என்ன நடந்தது?