சேலம் பெரியார் பல்கலை துணைவேந்தர் ஜெகநாதன் மீதான விசாரணைக்கு தடை!

Published : Jan 19, 2024, 01:32 PM IST
சேலம் பெரியார் பல்கலை துணைவேந்தர் ஜெகநாதன் மீதான விசாரணைக்கு தடை!

சுருக்கம்

சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் மீதான வழக்கு விசாரணைக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருப்பவர் ஜெகநாதன். இவர், பல்கலைக்கழகத்தின் பல்வேறு பணிகளை மேற்கொள்வதற்காக, விதிகளை மீறி சொந்தமாக ஒரு நிறுவனம் தொடங்கி, அதன் மூலம் அரசு பணத்தை தவறாக பயன்படுத்தியதாக புகார் எழுந்தது. அதேபோல், சாதி பெயரை குறிப்பிட்டு திட்டியதாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

இதுதொடர்பாக கருப்பூர் காவல்நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் நடத்தப்பட்ட விசாரணையில், அரசு நிதியை அவர் தவறாக பயன்படுத்தி  முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, துணைவேந்தர் ஜெகநாதனை கருப்பூர் போலீஸார் கைது எய்து விசாராணை நடத்தினர். தொடர்ந்து ஜெகநாதன் தொடர்புடைய இடங்களிலும் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

2ஜி வழக்கு கண் துடைப்பு நாடகம்.. அனைத்து டேப்களும் 3 வாரத்தில் ரிலீஸ்! போற போக்கில் அதிமுக சீண்டிய அண்ணாமலை!

இதனிடையே, சேலம் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ஜெகநாதனுக்கு, ஏழு நாட்கள் இடைக்கால ஜாமின் வழங்கப்பட்டது. இதனை ரத்து செய்யக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் சேலம் போலீஸ் கூடுதல் கமிஷனர் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு மீதான விசாரணை  நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, ஆவணங்களை சரிபார்த்ததில் ஜெகநாதனின் செயல்பாட்டில் குற்றநோக்கம் இருப்பதாக தெரியவில்லை என கூறி அவர் மீதான விசாரணைக்கு நீதிபதி தடை விதித்தார். இந்த வழக்கின் விசாரணையானது 4 வாரங்களுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

நீதிபதி சுவாமிநாதனுக்கு எதிராக கட்டம் கட்டும் திமுக..? ஸ்டாலினுக்காக களம் இறங்கும் இந்தியா கூட்டணி
வ.உ.சி. கப்பலில் வந்தே மாதரம்.. பாரதியார் பாடல் பாடி அசத்திய பிரதமர் மோடி!