மாமல்லபுரம் பண்ணையில் இருந்து குஜராத்திற்கு செல்லும் 1000 முதலைகள் - நீதிமன்றம் அனுமதி

By Ajmal KhanFirst Published Aug 10, 2022, 3:03 PM IST
Highlights

மாமல்லபுரம் முதலை பண்ணையில் இருக்கும் 1000 முதலைகளை குஜராத்திற்கு இடமாற்றம் செய்வதை எதிர்த்த வழக்கை தள்ளுபடி செய்து  சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
 

 முதலைகள் இடமாற்றம்

 மாமல்லபுரத்தில் இயங்கி வரும் முதலை பண்ணையில் கூடுதலாக இருக்கும் ஆயிரம் முதலைகளை குஜராத் மாநிலம் ஜாம் நகர் மாவட்டத்தில் உள்ள விலங்கியல் மறுவாழ்வு மையத்திற்கு இடமாற்றம் செய்ய மத்திய மாநில அரசு துறைகள் அனுமதியளித்ததை எதிர்த்து சென்னை சிந்தாதிரிபேட்டையை சேர்ந்த ஓய்வுபெற்ற ராணுவ வீரர் ஏ. விஸ்வநாதன்  என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த மனுவில், குஜராத்தில், 250 ஏக்கரில் சிறுத்தைகள், கரடிகள் உள்ளிட்ட 79 வகையான உயிரினங்களுடன் சிறிய அளவிலான வன விலங்கு பூங்கா அமைக்க 2019ல் விண்ணப்பித்து, 2023ல் ஆகஸ்ட் வரை மட்டுமே அனுமதி பெறப்பட்டுள்ளது. 56 முதலைகளை மட்டுமே வைக்கக்கூடிய 7300 சதுர மீட்டர் இடத்தில் 1000 முதலைகள் அடைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.  எனவே, மாமல்லபுரம் முதலை பண்ணையில் இருக்கும் முதலைகளை குஜராத்திற்கு இடமாற்றம் செய்ய அனுமதியளித்தது சட்டவிரோதம் என அறிவித்து, அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டுமென  கோரிக்கை வைத்துள்ளார்.

இந்திய செஸ் அணிக்கு 2 கோடி பரிசு... வீரர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

குஜராத் செல்லும் முதலைகள் 

மேலும், இந்த பூங்காவுக்கு அனுமதி வழங்கியது தொடர்பாக சி.பி.ஐ. அல்லது சிறப்பு புலனாய்வு குழுவின் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி, நீதிபதி என்.மாலா அடங்கிய அமர்வு, குஜராத்தில் உள்ள விலங்குகள் மறுவாழ்வு மையத்தில் ஆயிரம் முதலைகளை பராமரிக்க போதுமான இட வசதிகள் உள்ளது என்பது மறுவாழ்வு மையம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட புகைப்பட ஆதாரங்களில் மூலம் தெளிவாக தெரிவதாக நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும் மனுதாரர் கோரிக்கையை ஏற்க முடியாது என கூறிய நீதிபதி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். மேலும், முதலைகள் இடமாற்றம் செய்ய சட்டப்படி முறையாக அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், நிபுணர்களும் அந்த மையத்தில் உள்ள வசதிகள் குறித்து திருப்தி தெரிவித்துள்ளதாகவும் நீதிபதிகள் கூறினர். 

இதையும் படியுங்கள்

ஓபிஎஸ் உடன் இணைந்து செயல்பட வாய்ப்பு...! டிடிவி தினகரன் தகவலால் அதிர்ச்சியில் இபிஎஸ்


 

click me!